அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கை விட இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிதான் சிறந்த தலைவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடுவதைப் போலே வலுவான கருத்துக்களை பொது வெளியில் அப்ரிடி நன்கு பேசக்கூடியவர். எந்த விடயத்திலும் தனது கருத்தை கூறுவதில் அவர் பயப்படுவதில்லை மற்றும் மனதில் தோன்றக்கூடியதை பேசக்கூடியவர்.
அடுத்த டோனி யார் என்பதை வெளிப்படையாக கூறிய சுரேஷ் ரெய்னா
இதனிடையே, கிரிக்கெட் உலகில் வெற்றிகரமான தலைவர்களாக டோனி மற்றும் ரிக்கி பொண்டிங் இருவரும் வலம்வந்தனர்.
இதில், 2007 T20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2013 சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய மூன்று உலகக் கிண்ணத்தையும் வென்ற ஒரே தலைவராக டோனி சாதனை படைத்தார். அவரது தலைமையின் கீழ், இந்தியா அணி 2010இல் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
மறுபுறத்தில், ரிக்கி பொண்டிங் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்தடுத்த ஒருநாள் உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களை வெல்ல அணியை அழைத்துச் சென்றார்.
இதேவேளை, டோனியை விட வேறு எந்த கிரிக்கெட் வீரரும் ஒரு அணியை தலைவர் பொறுப்பில் இருந்து அதிக போட்டிகளில் வழிநடத்தியது கிடையாது.
இதன்படி, டோனி 332 (டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i போட்டிகள்) போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், இதில் இந்தியா 178 போட்டிகளில் வென்றது, 120 போட்டிகளில் தோல்வியடைந்தது.
Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125
அதேநேரம், உலக கிரிக்கெட்டில் உள்ள அனைத்து அணித் தலைவர்களிலும் சிறந்த வெற்றி சதவீதத்தை ரிக்கி பொண்டிங் கொண்டுள்ளார். பொண்டிங் அவுஸ்திரேலியாவை 324 போட்டிகளில் வழிநடத்தி அதில் 220 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். வெறும் 77 போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த அப்ரிடி டுவிட்டரில் இரசிகர்களுடனான கேள்வி–பதில் உரையாடலின் போது அவரிடம் இரசிகர் ஒருவர் பொண்டிங் மற்றும் டோனியில் யார் சிறந்த தலைவர் என கேட்டதற்கு அப்ரிடி பதிலளிக்கையில்,
எனக்கு தெரிந்தவரை டோனிதான் சிறந்த தலைவர். ஏனென்றால் அவர் இளம் வீரர்கள் அடங்கிய அணியை கட்டமைத்து வழி நடத்தினார்.
ஆனால் ரிக்கி பொண்டிங் விடயத்தில் ஸ்டீவ் வோஹ்தான் அவுஸ்திரேலிய அணியை கட்டமைத்தார். அந்த அணியை தான் பொண்டிங் வழி நடத்தினார். அதனால் டோனியா? பொண்டிங்கா? என வரும்போது டோனிதான் சிறந்தவர் என அப்ரிடி பதில் அளித்தார்.
ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்?
மேலும், தனக்கு மிகவும் பிடித்த துடுப்பாட்ட வீரர் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் என்றும், தனக்கு மிகப் பிடித்த சுழல் பந்துவீச்சாளர் அப்துல் காதிர் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல தற்போது கிரிக்கெட் உலகில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ்தான் சிறந்த பந்துவீச்சாளர் என்றும் இந்திய அணியில் மனம் கவர்ந்த துடுப்பாட்ட வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் அவர் தெரிவித்துள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<