NSL ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது

National Super League Limited Over Tournament 2024

183

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான (2024) தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இம்முறை போட்டித் தொடரில் காலி, கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய  அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐந்து அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரானது ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை நடைபெறும். 

ஒவ்வொரு அணியும் ஆரம்ப சுற்றில் 8 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 6ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

தேசிய சுப்பர் லீக் ஒருநாள் போட்டித் தொடரானது கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானம், கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய 3 மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<