ஆசியக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம்

194
Saud Shakeel

ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான சௌத் சகீல் இணைக்கப்பட்டிருக்கின்றார்.  

அந்தவகையில் சௌத் சகீல் முன்பு ஆசியக் கிண்ணத்திற்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற தய்யப் தாஹீருக்குப் பதிலாகவே தற்போது உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை சௌத் சகீல் உள்வாங்கப்பட ஆப்கானுக்கு எதிரான இறுதி ஒருநாள் தொடரில் ஆடாது போன தய்யப் தாஹீர், ஆசியக் கிண்ணத்தில் தற்போது பாகிஸ்தானின் மேலதிக வீரராக மாறியிருக்கின்றார்

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் ஆடியிருக்கும் சௌத் சகீல், டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். சௌத் சகீல் அண்மையில் பாகிஸ்தான் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை கைப்பற்ற துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> ஒருநாள் உலகக் கிண்ண சின்னங்களை அறிமுகம் செய்த ICC

எனவே சௌத் சகீலுக்கு ஒருநாள் போட்டிகளிலும் பிரகாசிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இறுதியாக சௌத் சகீல் ஆப்கானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் ஆடியிருந்தார் 

ஆசியக் கிண்ண குழு A இல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தமது முதல் போட்டியில் நேபாளத்தினை நாளை மறுதினம் (30) முல்டான் நகரில் வைத்து எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<