இலங்கை கிரிக்கெட்டுக்கு வேலை செய்ய சங்காவையும், மஹேலவையும் அழைக்கும் பைசர் முஸ்தபா

731

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரான மாண்புமிகு பைசர்  முஸ்தபா அவர்கள், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) ஆலோசகர்களாக வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

விளையாட்டு அமைச்சரின் முகவரிக்கு எழுதப்பட்ட கடிதமொன்றில், இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா மற்றும் தேசிய அணியின் தேர்வாளர்களும் சேர்ந்து இந்த முன்னாள் நட்சத்திரங்களின் சேவை முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது இலங்கை கிரிக்கெட்டுக்கு எந்தளவுக்கு தேவையாக இருக்கின்றது என்பதை விளக்கியிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு…

அமைச்சர் பேசுகையில், “இன்றைய நீதிமன்ற உத்தரவின்படி, எங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்துக்கான தேர்தல்களை தாமதிக்க முடியாது. அதனை எங்களுக்கு விரைவாக எப்போது முடியுமோ அப்போது நடாத்த முடியும். இலங்கை கிரிக்கெட்டை சீரான பாதையில் கொண்டு செல்ல எனது ஆளுமைக்கு முடியுமானவற்றைச் செய்து வருகின்றேன். இதன் ஒரு அங்கமாக, (தேசிய அணியின்) தேர்வாளர்கள் கேட்டுக்கொண்டதன்படி சங்கா, மஹேல, முரளி, அரவிந்த மற்றும் ரொஷான் போன்றோரை இலங்கை கிரிக்கெட் சபைக்கு இலங்கை கிரிக்கெட்டின் உயர்திறன்  செயற்பாடுகளுக்கான (High Performance) ஆலோசகர்களாக வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனக் கூறியிருந்தார்.

சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அணியின் தேர்வாளர்கள் முத்தையா முரளிதரன் ஆலோசகராக வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த தயாசிரி ஜயசேகரவிடம் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<