17 வயதின் கீழான கால்பந்து வீரர்களுக்கு தேசிய கால்பந்து அணியில் இணைய வாய்ப்பு

49

இலங்கை தேசிய கால்பந்து சம்மேளனம் (FFSL) 17 வயதின் கீழ்ப்பட்ட தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை இணைப்பதற்காக நாடாளவிய ரீதியில் தெரிவு முகாம்களை (National Trials) ஒழுங்கு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சைனீஸ் தாய்பேயிற்கு எதிரான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இந்தியாவில் ஆரம்பமாகும் 17 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்கான தெற்காசிய கால்பந்து தொடரில் (SAFF U17 Championship 2025) பங்கெடுக்கும் இலங்கை கால்பந்து அணிக்கு வீரர்களை இணைக்கும் விதமாகவே நாடாளவிய ரீதியில் தெரிவு முகாம்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.   

அதன்படி இந்த தெரிவு முகாம்கள் 5 வலயங்களாக நாடாளவிய ரீதியில் அனைத்து இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இது ஜூன் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஜூலை 06ஆம் திகதி வரை இடம்பெறும் என்பதோடு இறுதிக்கட்ட தெரிவுகள் ஜூலை 11, 12 மற்றும் 13 திகதிகளில் கொழும்பு பெத்தகனயில் அமைந்திருக்கும் தேசிய பயிற்சி நிலையத்தில் (National Training Center) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

தெரிவு முகாம்களில் பங்கெடுக்கும் இளம் வீரர்கள் 01.01.2009 தொடக்கம் 01.01.2011 வரையிலான திகதிகளில் பிறந்திருக்க வேண்டும் என்பதோடு, தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) என்பவற்றோடு சமூகம் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

தெரிவு அட்டவணை (திகதிகள்

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<