ThePapare.com இன் ThePapare Most Popular Schoolboy Cricketer விருதை வென்ற சதீஷ ராஜபக்ஷ

ThePapare.com Most Popular Schoolboy Cricketer 2021

215

தி சான்ஸ் ஸ்போர்ட்ஸின் பிரதான அனுசரணையில் முதன்முறையாக நடத்தப்பட்ட ThePapare.com இன், ThePapare Most Popular Schoolboy Cricketer (வருடத்தின் மிகவும் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான) விருதினை றோயல் கல்லூரியின் சதீஷ ராஜபக்ஷ வெற்றிக்கொண்டார்.

றோயல் கல்லூரியின் மிகவும் திறமைவாய்ந்த முதல் இலக்க துடுப்பாட்ட வீரரான சதீஷ ராஜபக்ஷ, 1,034,559 வாக்குகளை பெற்று, ThePapare.com இன் வருடத்தின் மிகவும் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான மதிப்புமிக்க விருதினை வெற்றிக்கொண்டார்.

பார்வைத்திறனுடன் துடுப்பாட்டத்தினை மேம்படுத்தல்

சதீஷ ராஜபக்ஷவுக்கு இந்த அண்டு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக கண்டி ட்ரிணிட்டி கல்லூரிக்கு எதிரான போட்டியில் 362 ஓட்டங்கள் என்ற சாதனை இணைப்பாட்டத்தை பெற இவர் காரணமாக இருந்தார். அத்துடன், இந்தப்போட்டியில் 152 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் பெற்றிருந்தார். இவரின் இந்த துடுப்பாட்டம் இவரை மிகவும் பிரபலமாக்கியிருந்தது.

இவருக்கு அடுத்தப்படியாக குருணாகல் புனித ஆனாள் கல்லூரியின் சகலதுறை வீரர் திரிமல்ஷ சில்வா இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார். இவர், மொத்தமாக 631,804 வாக்குகளை பெற்றுக்கொண்டார். இதேநேரம், பட்டியலின் மூன்றாவது இடத்தை இசிபதன கல்லூரி அணியின் தலைவர் தெவிந்து டிக்கெல்ல பிடித்துக்கொண்டார். இவர் மொத்தமாக 275,343 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ThePapare.com இன் வருடத்தின் மிகவும் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதுக்காக, 2020/21ம் ஆண்டு பருவகாலத்துக்கான டிவிஷன் ஒன்றை சேர்ந்த 36 பாடசாலைகளிலிருந்து 108 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். குறித்த இந்த விருதினை இலங்கையின் முதற்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஏற்பாடு செய்திருந்ததுடன், கொழும்பில் உள்ள பிரபல விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் தி சான்ஸ் ஸ்போட்ஸ் பிரதான அனுசரணையாளராக இணைந்துக்கொண்டது.

விருதுக்கான முதற்கட்ட வாக்கெடுப்புகள் மே 13 – 23ம் திகதிவரை எமது இணையத்தளத்தில் இடம்பெற்றது. இதில், முதல் 36 இடங்களை பிடித்த வீரர்களுக்கான வாக்கெடுப்பு மே 29ம் திகதியிலிருந்து நேற்று (18) இரவு 11.59 மணிவரை இடம்பெற்றிருந்தது.

அதன்படி, வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ThePapare.com இன் வருடத்தின் மிகவும் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதினை பெறும் சதீஷ ராஜபக்ஷ, தி சான்ஸ் ஸ்போரட்ஸிடமிருந்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துக்கொண்ட வீரர்களுக்கும் தி சான்ஸ் ஸ்போரட்ஸ் பெருமதியான பரிசு கூப்பன்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<