பார்வைத்திறனுடன் துடுப்பாட்டத்தினை மேம்படுத்தல்

Vision Care தரும் Sports Vision மூலம் உங்கள் திறனை உயர்த்துங்கள் - பாகம் 1 கிரிக்கெட் (துடுப்பாட்டம்)

174
 

கிரிக்கெட் இலங்கையர்களுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டுக்களில் ஒன்றாக கடந்த காலங்களில் இருந்தே காணப்படுகின்றது. அதன்படி, கேகாலையின் வயல்வெளிகள், கொழும்பின் வீதிகள், கண்டியின் மலைகள் மற்றும் ஹிக்கடுவ கடற்கரை என அனைத்து இடங்களிலும் கிரிக்கெட் விளையாட்டானது வயது வித்தியாசமின்றி அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டாக இருக்கின்றது. 

அதேநேரம் கிரிக்கெட் விளையாட்டே இலங்கையின் புகழினை சர்வதேச அளவில் கொண்டு சென்றிருக்கும் முக்கிய விளையாட்டாகும். இதற்கு,  இலங்கை கிரிக்கெட் அணி T20 மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணங்களினை வெற்றி கொண்டிருப்பது சான்றாகும். 

இலங்கையில் ஆண், பெண் என இருபாலாரும் தொழில், தொழில் சாரா முறைகளில் விளையாடும் இந்த கிரிக்கெட் விளையாட்டினை சிறந்த விதத்தில் விளையாடுவதற்கான வழிமுறைகளை இலங்கையின் தலைநகரமான கொழும்பில் இருந்து Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு வழங்குகின்றது.

கொழும்பு நகரில் பாதையில் விளையாடப்படும் கிரிக்கெட்
Coutersy – Nazly Ahamed – Flickr

அந்தவகையில், இந்த கட்டுரை மூலம் கிரிக்கெட் விளையாட்டில் நீங்கள் சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரராக வருவதற்கு Vision Care நிறுவனத்தின் Sports Vision எப்படி உதவுகின்றது என்பதனைப் பார்ப்போம். 

Vision Care நிறுவனத்தின் Sports Vision மூலம் உங்களது பார்வைத்திறனுடன் தொடர்புபட்ட பின்வரும் 10 திறன்கள் அதிகரிக்கப்படுகின்றது. 

  1. Visual Clarity – எந்த தூரத்தில் இருந்து பார்க்கும போதும் பொருளொன்றினை தெளிவாக அவதானிக்கும் திறன். 
  2. Contrast Sensitivity – வெவ்வேறு ஒளி நிலைமைகளில் பொருட்களை வேறு பிரித்து அவதானிக்கும் திறன் 
  3. Depth Perception – வெவ்வேறு நிலைமைகளில் பொருளின் தூரத்தினையும், அமைவினையும் சரியாக கணிக்கும் திறன். 
  4. Near/Far Quickness – அருகில்/தொலைவில் உள்ள பொருட்களை விரைவான முறையில் அவதானிக்கும் திறன்
  5. Perception Span – குறுகிய நேரத்திற்குள் பார்வை மூலம் சந்தர்ப்பத்திற்கு தேவையான தகவலினைப் பெறும் ஆற்றல்
  6. Reaction Time – பார்வை சமிஞ்சைக்கு கை மூலம் துலங்கல் வழங்கும் நேரம்
  7. Multiple Object Tracking – அசையும் பொருட்களை துல்லியமாக அவதானிக்கும் திறன்
  8. Target Capture – இலக்குகளை அவதானித்து செயற்படும் திறன்
  9. Eye-Hand Coordination – இலங்குகளை மாற்றும் போது திருத்தமான கை ஒருங்கிணைவு
  10. Go/No Go – அழுத்தங்களின் போது தீர்மானம் எடுக்கும் திறன்.

மேலே குறிப்பிட்ட திறன்களை பார்த்ததன் பின்னர் இவை ஒருவரின் துடுப்பாட்டத்திறனை அதிகரிப்பதற்கு எந்தளவிற்கு அவசியம் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். ஆனால், நாம் உங்கள் துடுப்பாட்டத்திறனை அதிகரிக்க மிக முக்கியமாக இருக்கும் 2 திறன்கள் பற்றியே இங்கே விவரிக்க போகின்றோம்.

நீங்கள் கிரிக்கெட் விளையாட்டினை ஆடும் போதோ, பயிற்சி வலைகளினுள் இருக்கும் போதோ உங்களுக்கு உங்கள் பயிற்சியாளர் பந்தினை பார்த்து விளையாடவும் என்று கட்டளையிட்டிருப்பதனை அடிக்கடி காண முடியுமாக இருந்திருக்கும். இவ்வாறாக நீங்கள் துடுப்பாடும் சந்தர்ப்பத்தில் நீங்கள் பந்தினை அடிக்காமல் விடும் போது அது உங்களுக்கு அதிஷ்டம் என்றால் விக்கெட்காப்பாளரின் கைகளை சென்றடையும். ஆனால், சில நேரங்களில் நீங்கள் அடிக்காமல் விடும் பந்து ஸ்டம்ப்களையும் பதம் பார்த்து விடும்.

இவ்வாறு பந்தினை நீங்கள் அடிக்காமல் விடும் சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்களது கிரிக்கெட் நுணுக்கங்கள் சார்ந்த அதிக பயிற்சிகளை மேற்கொண்டு முன்னேறுவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், அப்படி பயிற்சிகள் செய்தும் உங்களுக்கு பந்தினை அடிக்க முடியாது போயின், உங்களுக்கு பார்வைத் திறன்களான Near/Far Quickness (அருகில்/தொலைவில் உள்ள பொருட்களை விரைவான முறையில் அவதானிக்கும் திறன்) மற்றும் Depth Perception (வெவ்வேறு நிலைமைகளில் பொருளின் தூரத்தினையும்,  அமைவினையும் சரியாக கணிக்கும் திறன்) ஆகியவற்றினை விருத்தி செய்ய வேண்டிய தேவை ஒன்று இருக்க முடியும். 

Depth Perception என்றால் என்ன??

Depth Perception எனப்படுவது பொருட்களை முப்பரிமாணமாக பார்வையிடும் ஆற்றலாகும். இந்த ஆற்றல் மூலம் பொருள் ஒன்று எவ்வளவு தூரத்தில் காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். இந்த ஆற்றலை முன்னேற்றுவதன் மூலம் நீங்கள் துடுப்பாட்டத்தில் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல்பந்துவீச்சு என்பவற்றினை சரியாக கணித்து ஆட முடியுமாக இருக்கும்.

ஒரு துடுப்பாட்டவீரராக பந்தினை சரியாக கையாள்வதற்கும், சரியான நேரத்தில் அடிப்பதற்கும் உங்களுக்கு பார்வையின் மூலம் அதன் அமைவினை சரியாக கணிப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும்.  

Near-far quickness என்றால் என்ன?

அருகில் மற்றும் தொலைவில் இருக்கும் பொருட்கள் மீது ஒரு குறுகிய நேரத்தில் அதுவும் தெளிவான முறையில் நமது கவனத்தினை (Focus) மாற்றிக்கொள்ளும் ஆற்றல் Near-far quickness ஆகும். உங்களது மூளை உங்கள் கண்கள் கவனம் எடுக்கின்ற விடயம் ஒன்று தொடர்பிலான தகவலை விரைவாக செயன்முறைக்கு உட்படுத்துவதோடு, அது தொடர்பிலான போதிய விளக்கத்தினையும் வழங்க முனையும். எனவே, இதனை விரைவாக செய்வது உங்களது ஆட்டத்தில் பெரும் பங்களிப்பு ஒன்றினைச் செய்யும்.

Peter Friesen

எனவே, ஒரு துடுப்பாட்ட வீரராக நீங்கள் பார்வை ஆற்றலான Near-far quickness இணை விருத்தி செய்வது பந்து தொடர்பான சரியான கவனத்தினை சரியான நேரத்தில் மேற்கொண்டு வினைத்திறனாக இருக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். 

உங்கள் கண்களே உங்கள் உடலை இயக்குகின்றன.

Sports Vision பிரிவில் அடிக்கடி உபயோகம் செய்யும் வாசகங்களில் ஒன்றாக ”உங்கள் கண்களே உங்கள் உடலை இயக்குகின்றன” என்னும் சொற்தொடர் காணப்படுகின்றது.  

ஒரு துடுப்பாட்ட வீரராக நீங்கள் இருக்கும் நிலை ஒன்றினை கற்பனை செய்யுங்கள். எனவே, நீங்கள் துடுப்பாட முனையும் போது உங்களுக்கு பந்தொன்று அருகில் இருந்த போதும் நீங்கள் அதனை தூரத்தில் இருக்கின்றது அல்லது வேறு ஒரு நிலையில் இருக்கின்றது என்று கணக்கிடுவீர்கள் எனில் நீங்கள் தவறான  துலங்கல் ஒன்றினைக் காட்டுவீர்கள். இதனால், பந்தானது ஆட்டமிழப்பு ஒன்றுக்கோ அல்லது சரியான நேரத்தில் அடிக்கப்படாத பந்து ஒன்றாகவோ மாற முடியும்.

அதேநேரம், தற்போது பலர் கொவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். இதனால், வெளி இடத்தில் பயிற்சிகள் செய்வது போன்று Near-far quickness மற்றும் Depth Perception போன்ற பார்வை ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, இவ்வாறான பிரச்சினை ஒன்றுக்கும் Vision Care நிறுவனத்தின் Sport Vision பிரிவின் சேவைகள் தீர்வாக அமைகின்றது. 

மறுமுனையில், உடற்தகுதியினை தொடர்ந்து பேணுவது சிறப்பான விடயம் என்ற போதும், பார்வையின் ஆரோக்கியத்தினையும் சரியாக பேணும் சந்தர்ப்பம் ஒன்றிலேயே எமது உடலின் முழு ஆற்றலும் வெளிப்படும். 

எமது பார்வையினை விருத்தி செய்வதற்காக நவீன வசதிகள் Vision Care நிறுவனத்தின் Sport Vision பிரிவில் காணப்படுகின்றன. உதாரணமாக, நீங்கள் உங்களது Depth Perception இணை விருத்தி செய்ய முயற்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அதனை VR தொழில்நுட்பம், Senaptec Sensory Station மற்றும் Synchrony and Fitlight Trainer போன்றவற்றின் துணையுடன் விருத்தி செய்து கொள்ள முடியும். 

குறிப்பாக Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவில் உபயோகம் செய்யப்படும் அத்தியாவசிய உபகரணமான Senaptec Strobe Eyewear ஆனது மூளை உங்களது பார்வைத்தகவல்களை விரைவாக  செயன்முறைக்கு உட்படுத்த உதவுவதோடு, துலங்கல்களையும் விரைவாக வெளிக்காட்ட உதவுகின்றது. அதோடு இந்த உபகரணம் மூலம், விஞ்ஞானரீதியில் பார்வை நினைவு மற்றும் பார்வையின் கூர்மைத்தன்மை என்பன அதிகரிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், Strobe Eyewear இல் 5 நிமிடங்கள் தொடக்கம் 7 நிமிடங்கள் வரை செய்யும் பயிற்சிகள் எமது எதிர்நோக்குத்திறனையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. உங்களது பார்வையின் வலிமையினை அதிகரிப்பது உங்களது புலன் உணர்வுகளில் ஒன்றினை அதிகரிக்கும் விடயமாகும். இதன் மூலம் நீங்கள் விளையாட்டில் அதிக போட்டித்தன்மை கொடுக்கும் ஒருவராக மாற முடியும். 

அடுத்ததாக எதிர்வரும் வாரங்களில் நாம் பந்துவீச்சாளர்கள், விக்கெட் காப்பாளர்கள் மற்றும் களத்தடுப்பில் ஈடுபடுபவர்கள் தங்களது பார்வைத்திறனை Vision Care நிறுவனத்தின் Sports Vision மூலம் எப்படி அதிகரிக்க முடியும் என்பதனைப் பார்ப்போம். 

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும்.