பெங்களூர் அணியிலிருந்து வெளியேறும் முன்னணி வீரர்

IPL 2023

106

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து வீரர் வில் ஜெக்ஸ், IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில், இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான வில் ஜெக்ஸ் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் அணியுடன் இணையும் உமர் குல்!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இந்திய ரூபாயில் 3.2 கோடிக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருந்தது.

இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வில் ஜெக்ஸ் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். குறித்த உபாதை சற்று தீவிரமானதாக உள்ளதால் IPL தொடரிலிருந்து விலகுவதாக வில் ஜெக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

வில் ஜெக்ஸ் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் மைக்கல் பிரேஸ்வலை அணியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை பெங்களூர் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைக்கல் பிரேஸ்வல் டிசம்பர் மாதம் நடைபெற்ற IPL ஏலத்தில் பங்கேற்றிருந்ததுடன், அவரை வாங்குவதற்கு எந்த அணிகளும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<