பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அந்த அணியில் ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி தற்பொது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட T20I ம்ற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த T20I தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி T20I தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (08) முதல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் அணியின் தலைவராக ஷாய் ஹோப் தொடரும் நிலையில், துணைத் தலைவராக பிராண்டன் கிங் செயல்படவுள்ளார்.
- ஆசியக்கிண்ணத் தொடர் 2025; ஆப்கானிஸ்தான் முதற்கட்ட குழாம் அறிவிப்பு
- உபாதை காரணமாக வெளியேறும் வேகப்பந்துவீச்சாளர்
- அறிமுக வீரரினை இரண்டாவது டெஸ்டில் களமிறக்கும் நியூசிலாந்து
அதேபோல, எவின் லூயிஸ், கேசி கார்டி, ரொஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதனிடையே, வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்புக்கு தொடர் பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் ஓய்வளிக்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மறுபுறுத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் பிளே-ஓப் காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை தவறவிட்ட ரொமாரியோ ஷெப்பர்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் அணி விபரம்: ஷாய் ஹோப் (தலைவர்), ஜூவல் ஆண்ட்ஷரூ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரொஸ்டன் சேஸ், மெத்யூ ஃபோர்ட், ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ஷரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.
மேற்கிந்தியத் தீவுகள்; – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் அட்டவணை
முதல் ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 8, டிரினிடாட் & டொபாகோ
இரண்டாவது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 10, டிரினிடாட் & டொபாகோ
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 12, டிரினிடாட் & டொபாகோ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















