சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக அறிவித்துள்ள ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ரோஹித் சர்மா கடந்த தசாப்த காலமாக ஒருநாள் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிவந்திருந்த போதும், முதன்முறையாக இவர் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>உபாதை நீங்கி மீண்டும் தென்னாபிரிக்க அணியில் பவுமா<<
இவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 73 ஓட்டங்களையும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 121 ஓட்டங்களையும் விளாசியிருந்தார். இதன்மூலம் மூன்றாவது இடத்திலிருந்த இவர் இப்ராஹிம் ஷர்தான் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை மற்றுமொரு சகலதுறை வீரரான அக்ஸர் பட்டேல் மூன்று போட்டிகளிலும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டு போட்டிகளில் 31 மற்றும் 44 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இதன்மூலம் அக்ஸர் பட்டேல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 31ஆவது இடத்தையும், சகலதுறை வீரர்கள் தரவரிசையில் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















