மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று புதன்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யசஷ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
யசஷ்வி ஜெய்ஸ்வால் இந்தியா 19 வயதின் கீழ் அணியில் அறிமுகமாகியதிலிருந்து உள்ளூர் மற்றும் IPL போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக ஹஸரங்க தெரிவு
இவ்வாறான நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்ட இவர், அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
முதல் போட்டியில் களமிறங்கவுள்ள துடுப்பாட்ட வரிசை தொடர்பில் கருத்து வெளியிட்ட ரோஹித் சர்மா, “துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரையில் சுப்மான் கில் மூன்றாவது இலக்கத்தில் களமிறங்கவுள்ளார்.
சுப்மான் கில் அவருடைய கடந்தகால கிரிக்கெட்டில் 2ம் மற்றும் 4ம் இலக்க வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடியுள்ளார். அதனால் மூன்றாவது இலக்கத்தில் சிறப்பாக ஆடுவார். அவர் மூன்றாவது இலக்கத்தில் களமிறங்கினால் ஆரம்ப வீரர்களாக இடதுகை (ஜெய்ஸ்வால்) மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்க முடியும்.
நாம் நீண்ட நாட்களாக இடதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவரை ஆரம்ப வீரராக களமிறக்க எதிர்பார்த்திருந்தோம். எனவே அவர் (ஜெய்ஸ்வால்) இந்த இடத்தை தனக்கான இடமாக மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
இதேவேளை ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவார் எனவும் ரோஹித் சர்மா சுட்டிக்காட்டினார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<