பிரேசிலின் நட்சத்திரக் கால்பந்து வீரருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை

337

பிரேசில் தேசிய கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணி என்பவற்றின் முன்னாள் நட்சத்திர வீரரான ரொபின்ஹோவுக்கு இத்தாலி நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ரொபின்ஹோ, கடந்த 2013ஆம் ஆண்டு .சி. மிலான் கழகத்துக்காக விளையாடும் காலத்தில், மிலான் நகரில் இரவு விடுதி ஒன்றில் தங்கி இருந்தபோது அல்பேனிய பெண் ஒருவரை குடிபோதையில் 5 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.   

FIFA தரவரிசை வெளியீடு : வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சரிவு

சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA) தரவரிசையில்…

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஸ்பெய்னின் மிலான் நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 60 ஆயிரம் யூரோ நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ரொபின்ஹோ சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அத்துடன், தனக்கும் இந்த கற்பழிப்பு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என ரொபின்ஹோ, இன்ஸ்டகிராம் வாயிலாக நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.

எனினும், அவர் குறித்த கற்பழிப்பு குற்றச்சாட்டில் இனங்காணப்பட்ட பிரதான குற்றவாளிகளில் ஒருவராக ஆதாரங்களுடன் நிரூபனமாகியதையடுத்து ரொபின்ஹோ மீது இத்தீர்ப்பு நேற்று (23) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பினால் ரொபின்ஹோவுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் சட்டப்படி அந்நாட்டு குடிமகனை ஏனைய நாடுகளிடம் ஒப்படைக்க முடியாது. அதனால், மூன்றாவது நாட்டில்தான் ரொபின்ஹோவை இத்தாலி கைதுசெய்ய முடியும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்காக குறித்த தண்டணையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பிரேசிலின் சன்டோஸ் கழகத்துடன் இணைந்து தனது தொழில்முறை கால்பந்து விளையாட்டை ஆரம்பித்த ரொபின்ஹோ, 2002 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லீக் போட்டிகளில் அக்கழகத்துக்கு சம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்தார்.

ஒரு காலோடு கால்பந்தில் அசத்தி உலகை தன்பக்கம் ஈர்த்துள்ள ஹீ

அதன்பிறகு 2005ஆம் ஆண்டு, ரியல் மெட்ரிட் அணியில் இணைந்த அவர், அதனைத் தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டிக்காக 2008 முதல் 2010 வரை விளையாடியுள்ளார். அக்காலப்பகுதியில் 41 லீக் போட்டிகளில் அவ்வணிக்காக விளையாடிய ரொபின்ஹோ, 14 கோல்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஏ.சி.மிலானில் 2012ஆம் ஆண்டு இணைந்தார்.

பிரேசில் அணிக்காக 100 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ள ரொபின்ஹோ, 28 கோல்களை அடித்துள்ளார். ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடியபோது, இரு முறை லா லீகா பட்டத்தை வென்று கொடுப்பதற்கு முக்கிய காரணமாகவும் இவர் இருந்தார்.

தற்போது, 33 வயதான ரொபின்ஹோ கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பிரேசிலின் அத்லெடிகோ மினாரோ கழகத்துக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க