ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐ.சி.சி அறிமுகம்

241

சர்வதேச கிரிக்கெட் பேரவை ‘ICC Player of the Month’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் சர்வதேசப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில் மாதத்தின் அதிசிறந்த ஐ.சி.சி கிரிக்கெட் வீரர் விருதை அறிமுகம் செய்துள்ளது. 

ஆண்டுதோறும் .சி.சி சார்பில் சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சில வீரர்கள் ஒரு மாதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இப்படிபட்ட நிலையில் .சி.சி இன் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க முடியாத நிலை சில வீரர்களுக்கு ஏற்படும்

இந்நிலையில் மாதந்தோறும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான புதிய விருதை .சி.சி அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தீடீரென ஒத்திவைப்பு

இதன்படி, மாதந்தோறும் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளை இதற்கென நியமிக்கப்படும் ஐசிசி குழுவினர் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை அறிவிக்க உள்ளனர்

இந்தக் குழுவில் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ஒளிப்பரப்பாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்இந்த வாக்களிப்பில் 10 சதவீத ரசிகர்களும் சேர்க்கப்பட உள்ளனர். ரசிகர்கள் தங்களது வாக்கை .சி.சி இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் இந்த விருது .சி.சி இன் சமூகவலைப் பக்கங்களில் வெளியிடப்பட உள்ளதாக .சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான வீரர்கள் பரிந்துரையில் இந்திய வீரர்களான மொஹமட் சிராஜ், வொஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன், ரிஷாப் பாண்ட், அஷ்வின், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Video – 107 ஆண்டுகளில் இல்லாத சாதனை: இலங்கையில் சாதித்த இங்கிலாந்து | Sports RoundUp – Epi 146

இதேபோல வீராங்கனைகள் பரிந்துரையில் தென்னாபிரிக்காவின் மாரிஸ்ஆன் கெப், நாடின் டி கிளார்க், பாகிஸ்தானின் நிதா தார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் இதுபோன்ற மாதத்தின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<