மெண்டிஸின் சகலதுறை ஆட்டத்தால் இரண்டாவது முறை சம்பியனானது ரிச்மண்ட்

565

சதுன் மெண்டிஸின் அதிரடி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தின் மூலம் புனித பேதுரு கல்லூரிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்மூலம், தனஞ்சய லக்ஷான் தலைமையிலான ரிச்மண்ட் கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் பாடசாலைகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

லக்ஷானின் சகலதுறை ஆட்டத்தால் ரிச்மண்ட் கல்லூரி இறுதிப் போட்டியில்

அணித்தலைவர் தனஞ்சய லக்ஷானின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் ரிச்மண்ட் கல்லூரி 19 வயதுக்கு

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த தொடரில், புனித தோமியர் கல்லூரிக்கு எதிரான அரையிறுதியில் ரிச்மண்ட் கல்லூரி லக்ஷான் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 130 ஓட்டங்களையும் பெற்று வழங்கிய பங்களிப்புடனேயே இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. மஹிந்த கல்லூரிக்கு எதிரான அரையிறுதில் 170 என்ற குறைந்த ஓட்டங்களை பெற்றபோதும் அதனை பாதுகாத்தே பேதுரு கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், காலி சர்வதேச மைதானத்தில் இன்று (28) நடைபெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி ஆரம்பம் தொடக்கம் நின்றுபிடித்து ஆடத் தவறியது. ஆரம்ப வீரராக வந்த அணித்தலைவர் அதிரடியாக ஆடியபோதும் 13 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆதித்ய சிறிவர்தன 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு மத்திய வரிசை வீரர்களும் சோபிக்கத் தவறினர்.

சம்பியன் மற்றும் இரண்டாம் இடத்திற்கான கிண்ணங்களுடன் இரு அணிகளது தலைவர்கள்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித்தலைவரான கமிந்து மெண்டிஸ் 3 ஓட்டங்களையே பெற்றார். எனினும் மத்திய பின்வரிசையில் வந்த திலும் சுதீர (39) மற்றும் கமிந்து மெண்டிஸின் சகோதரர் சதுன் மெண்டிஸ் (42) ஆகியோர் கடைசி நேரத்தில் கைகொடுத்தனர்.     

இதன்மூலம் ரிச்மண்ட் கல்லூரி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. இதன்போது புனித பேதுரு கல்லூரி சார்பில் மொஹமட் அமீன் மற்றும் கனிஷ்க மதுவன்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், எட்ட முடியுமான இலக்குடன் பதிலெடுத்தாட களமிறங்கிய சன்துஷ் குணதிலக்க தலைமையிலான புனித பேதுரு கல்லூரி, ஓட்டம் பெறும் முன்னரே அணித்தலைவரை பறிகொடுத்ததோடு ஒரு ஓட்டத்தை பெற்றபோது முதல் வரிசையில் வந்த மொஹமட் அமீனின் விக்கெட்டை இழந்தது. அமீன் ஓட்டமின்றியே வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளை வீழ்த்திய ரிச்மண்ட் அணித்தலைவர் லக்ஷான் மீண்டும் ஒருமுறை தனது அணிக்கு பலம் சேர்த்தார்.

கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை

ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடர், மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம்

எனினும் மத்திய வரிசையில் வந்த ஷெனோன் பெர்னாண்டோ சிறப்பாக ஆடி அரைச்சதம் (52) ஒன்றை குவித்தார். எவ்வாறாயினும் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் சதுன் மெண்டிஸ் புனித பேதுரு கல்லூரியை ஆட்டம் காணச் செய்தார். சிறப்பாக ஆடி வந்த ஆரம்ப வீரர் சுலக்ஷன் பெர்னாண்டோவை 25 ஓட்டங்களுடன் வெளியேற்றியதோடு மத்திய வரிசை வீரர் ரன்மித் ஜயசேனவை ஓட்டமின்றி வெளியேற்றினார்.

அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ஓட்டத்திற்கு ஆட்டமிழக்கச் செய்ய புனித பேதுரு கல்லூரியின் வெற்றி வாய்ப்பு பிறபோனது. இறுதியில் அந்த அணி 46.4 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அபாரமாக பந்து வீசிய சதுன் மெண்டிஸ் 10 ஓவர்களுக்கும் 20 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். தவிர, லக்ஷான் மற்றும் அவிந்து தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.     

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி – 201/9 (50) – சதுன் மெண்டிஸ் 42, திலும் சுதீர 39, ஆதித்ய சிறிவர்தன 27, தனஞ்சய லக்ஷான் 21, மொஹமட் அமீன் 2/25, கனிஷ்க மதுவன்த 2/34

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு – 172 (46.4) – ஷனொன் பெர்னாண்டோ 52, கனிஷ்க மதுவன்த 39, சுலக்ஷன பெர்னாண்டோ 25, சதுன் மெண்டிஸ் 5/20, தனஞ்சய லக்ஷான் 2/22, அவின்து தீக்ஷன 2/41

முடிவு ரிச்மண்ட் கல்லூரி 29 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க