இந்திய சுற்றுத்தொடரின் நடுவில் நாடு திரும்பும் இளம் சுழல்பந்துவீச்சாளர்

232
Rehan Ahmed

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரெஹான் அஹ்மட் தனது இந்திய சுற்றுப்பயணத்தினை பாதியிலேயே நிறைவு செய்து நாடு திரும்புவதாக கூறப்பட்டுள்ளது.  

>> இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் A அணி!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் ரெஹான் அஹ்மட் ஆடிய நிலையில் நேற்று (23) ரஞ்சியில் ஆரம்பமாகிய தொடரின் நான்காவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு சொஹைப் பாசிர் இங்கிலாந்து அணியில் இணைந்திருந்தார்.   

விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே ரெஹான் அஹ்மட் நாடு திரும்பும் செய்தி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவர் தனது சொந்தக் காரணங்கள் கருதி நாடு திரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

இந்திய சுற்றுப்பயணத்தில் ரெஹான் அஹ்மட் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி மொத்தமாக 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இந்தியஇங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இங்கிலாந்து இப்போட்டிக்காக ரெஹான் அஹ்மட்டின் பிரதியீட்டு வீரரை இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் இந்தியஇங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<