ஆப்கானிஸ்தான் T20 அணியின் தலைவராக ரஷித் கான் நியமனம்

75
AFP
 

ஆப்கானிஸ்தான் T20 அணியின் தலைவராக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் அணியின் தலைவராக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டார். எனினும், T20 அணியின் தலைவர் பொறுப்பை ஏற்க ரஷித் கான் மறுத்து வந்தார்

இந்த நிலையில், எதிர்வரும்க்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையில் ரஷித் கானை ஆப்கானிஸ்தான் T20 அணியின் தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதுதொடர்பில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பார்ஹான் யூசுப்சாய் கருத்து தெரிவிக்கையில்,

T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள ரஷித் கானின் சிறந்த ஆளுமை மூலமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுச் சேர்ப்பார் என்று தெரிவித்தார்.

UAE மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட்ட ICC T20I உலகக் கிண்ணம்

இதளிடையே, T20 அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து ரஷித் கான் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘என்னுடைய அணிக்கு சிறந்த தலைவராக செயல்படுவேன் என நம்புகிறேன். ரஷித் கான் என்ற பெயரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை எனக்கு அளித்துள்ளது.

என்னுடைய நாட்டு அணிக்காக, நாட்டுக்காக பணியாற்றுவது எனது கடமை. என் மீது நம்பிக்கை வைத்தமைக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. இது எனது கனவுப்பயணம், என்னுடைய ரசிகர்கள் ஆதரவு முக்கியமானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ரஷித் கான் செயல்பட்டிருந்தார். இதில் 16 போட்டிகளில் தலைவராகச் செயல்பட்டு 6 போட்டிகளில் ஆப்கான் அணி வெற்றயீட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

அதேநேரம், ஆப்கானிஸ்தான் T20 அணியின் உப தலைவராக நஜிபுல்லா ஸத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது

அத்துடன், தகுதிச் சுற்றின் அடிப்படையில் மேற்கொண்டு இரண்டு அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…