ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மே.தீவுகள்

West Indies tour of UAE 2023

96

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதியை இழந்துள்ள நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளது.

ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தொடருக்கு முன் ஆயத்தமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக மே.தீவுகள் விளையாடவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் அடுத்த மாதம் 5, 7 மற்றும் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர் நிறைவடைந்த பின்னர், இரண்டு அணிகளும் ஜூன் 18 முதல் ஜூலை 9ம் திகதிவரை ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டி அட்டவணை

  • ஜூன் 5 – முதல் ஒருநாள் போட்டி – ஷார்ஜா
  • ஜூன் 7 – இரண்டாவது ஒருநாள் போட்டி – ஷார்ஜா
  • ஜூன் 9 – மூன்றாவது ஒருநாள் போட்டி – ஷார்ஜா

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<