டி20 போட்டிகளில் புதிய மைக்கல்லை எட்டிய ரஷீட் கான்

404

கடந்த ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுக்களை வீழ்த்தியதும், 90க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரராகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் பெயரிடப்பட்டுள்ளார்.   

ஆப்கானிஸ்தான் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆயுத போர்கள் தான். அவ்வாறான பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் இருந்து ஒரு தேசிய கிரிக்கெட் அணி எழுந்திருக்கின்றது என்றால் அதற்கு ஆதரவு கொடுத்து வளர்க்க வேண்டியது கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைவரினதும் கடமையாக இருக்கின்றது.

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) சம்பியன்களாக பல்க் லெஜென்ட்ஸ் அணி

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் ……

இவ்வாறு மிகப் பெரிய சவால்களுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச ரீதியில் ஒரு அணியாக உருவாகியிருக்கின்ற இந்த ஆப்கானிஸ்தான் எனும் அணியிலிருந்து கிரிக்கெட் உலகமே இன்று போற்றும் அளவுக்கு ஒரு வீரன் உருவாகியிருக்கின்றான் என்றால் ஆசியாவை சேர்ந்த நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயம்.

1998 செப்டம்பர் 20ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் எனும் பிரதேசத்தில் பிறந்த ரஷீட் கான் எனும் 20 வயதுடைய இளம் சிறுவனே இன்று கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியிருக்கின்றான்.

இவ்வாறு பேசுபொருளாக மாறியிருப்பதற்கு என்ன செய்திருக்கின்றார் ரஷீட் கான்..?

இருபது ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் 2018ஆம் ஆண்டில் தன்னுடைய சுழல் திறமையின் மூலம் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைந்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகள், இந்தியாவில் நடைபெறும் .பி.எல், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ், பாகிஸ்தானில் நடைபெறும் பி.எஸ்.எல், பங்களாதேஷில் நடைபெறும் பி.பி.எல், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் .பி.எல் போன்ற இருபது ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் விளையாடியே ரஷீட் கான் இந்த சாதனைய படைத்துள்ளார்.

ரஷீட் கானை 2019ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்த சசெக்ஸ் அணி

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கானின் ஒப்பந்தத்தை இங்கிலாந்தின் கவுண்டி …..

2018 இல் 61 டி20 போட்டிகளில் விளையாடிய ரஷீட் கான் மொத்தமாக 96 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதுவரையில் எந்ததொரு வீரரும் ஒரு ஆண்டில் 90 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்  ஆப்கானிஸ்தான் தேசிய அணி, அடிலெய்ட் ஸ்ரைக்கேர்ஸ், டேர்பன் ஹிட், .சி.சி உலக பதினெருவர், காபுல் சுவான், சன்ரைஸஸ் ஹைதராபாத், சசெக்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி இந்த விக்கெட்டுக்களை வீழ்த்தி 2018ஆம் ஆண்டில் சாதனை படைத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஆஸி. வீரர் அண்ரூ டை 51 போட்டிகளில் 75 விக்கெட்டுக்களை வீழ்த்தி இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.

மேற்கிந்தி தீவுகள் அணியின் ஜோபா ஆர்சர், தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், மேற்கிந்தி தீவுகள் வீரர் டுவைன் பிராவோ, நியூஸிலாந்து வீரர் இஷ் சொதி, மற்றுமொரு ஆப்கான் வீரர் முஜீபுர் ரஹ்மான், பாக். வீரர் வஹாப் ரியாஸ் ஆகியோர் முறையே  3 முதல் 8ஆம் வரையான இடங்களை பிடித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 2017ஆம் ஆண்டிலும் 56 போட்டிகளில் 80 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரஷீட் கானே முதலிடத்தை பிடித்தார். மீண்டும் அவரே தனது சாதனையை முறியடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவில் 2020 ….

இதேவேளை, தற்சமயம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் போட்டியில் அடிலெய்ட் அணிக்காக ரஷீட் கான் விளையாடிவரும் நிலையில், அவரது தந்தை கடந்த 30ஆம் திகதி இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷீட் கான் தனது தந்தைக்கான இரங்கல் செய்தியை டுவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று (30) நான் எனது வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரான எனது தந்தையை இழந்து விட்டேன். இனி என் வாழ்க்கைக்கு ஒளியேற்ற என் தந்தை இல்லை. நான் மனவலிமையுடன் இருக்க வேண்டுமென்று, என் தந்தை எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் என தெரிந்து விட்டது. இன்று உங்களது இழப்பை தாங்கிக் கொள்ள எனக்கு மன வலிமை அவசியம் தேவைப்படுகின்றது. நான் உங்களை மிகவும் இழக்கின்றேன்என குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக சமூக வலைத்தளங்களில்நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் ரஷீட் கான்என ஆறுதல்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தனது தந்தையின் உடல் நல்லடக்கத்திற்கு அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், போட்டியில் விளையாடியவாறு தனது தந்தைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அத்துடன் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கூடியிருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள் எழுந்து நின்று ரஷீட் கானின் தந்தைக்கு மரியாதை செலுத்தியிருந்தார்.

2018 டெஸ்ட் துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி, பந்துவீச்சில் ககிஸோ ரபாடா முதலிடம்

2018ஆம் ஆண்டு முடிவில் ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள ….

இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீட் கான் 118 விக்கெட்டுக்களையும், 35 டி20 போட்டிகளில் 64 விக்கெட்டுக்களையும், ஒரு டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுக்களும் உள்ளடங்களாக மொத்தமாக 184 சர்வதேச விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இதில் மிகக்குறைந்த வயதில் 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் ரஷீட் கான் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் அணியின் வளர்ச்சியை கண்ட .சி.சி யானது அவர்களுக்கு கடந்த 2018 ஜூன் மாதம் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியிருந்தமையும் விசேட அம்சமாகும்.

அத்துடன் ஆப்கானிஸ்தானில் சிறப்பான டி20 ஆட்டங்களினால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிக்கு இலங்கை  அணியினால் நேரடியாக தகுதி பெற முடியாமல் போனமையும் இங்கே நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<