இவ்வருட இறுதியில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்

788

இலங்கை அணி எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. இதன் போட்டி அட்டவணை நியூசிலாந்து கிரிக்கெட் சபையால் செவ்வாய்க்கிழமை (31) வெளியிடப்பட்டது.

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி நேப்பியரில் பயிற்சி போட்டி ஒன்றில் விளையாடவிருப்பதோடு இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வெலிங்கடன் பேசின் ரிசேவில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பொக்சின் தின (Boxing Day) போட்டி அட்டவணையாக கிறிஸ்ட்சேர்ச்சின் (Christchurch) ஹகலி ஓவலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும்.  

>> இலங்கை அணியின் தோல்வி குறித்து மனந்திறந்த திலான் சமரவீர

இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் மவுண்ட் மொன்கனுய்யின் பேய் ஓவல் மைதானத்தில் விளையாடவிருப்பதோடு மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி நெல்சனில் நடைபெறும். ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஒக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் ஒரே ஒரு டி-20 போட்டியுடன் இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பணயம் முடிவடையவுள்ளது.

இலங்கை அணி கடைசியாக 2015/16 இல் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடியது.          

இலங்கை எதிர் நியூசிலாந்து போட்டி அட்டவணை

  • முதலாவது டெஸ்ட் – டிசம்பர் 15-19, வெல்லிங்டன்
  • இரண்டாவது டெஸ்ட் – டிசம்பர் 26-30, கிறிஸ்ட்சேர்ச்
  • முதலாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 3, மவுண்ட் மொன்கனுய்
  • இரண்டாவது ஒருநாள் – ஜனவரி 5, மவுண்ட் மொன்கனுய்
  • 3ஆவது ஒருநாள் போட்டி – ஜனவரி 8, நெல்சன்
  • ஒற்றை டி-20 – ஜனவரி 11, ஒக்லாந்து

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<