இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான மே.தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள மே.தீவுகள் குழாத்தில் இளம் துடுப்பாட்ட வீரர் குவெண்டின் செம்சன் இணைக்கப்பட்டுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றிருந்த இவர், ஆப்கானிஸ்தான் தொடரில் அறிமுகமாகியிருந்தார்.
>>சுபர் 6 மோதலில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை இளம் அணி<<
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று T20I போட்டிகளில் 35 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த போதும், அவருடைய திறமையை கருத்திற்கொண்டு அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் SAT20 தொடரில் விளையாடிவந்த ஷேய் ஹோப்புடன், ரொஸ்டன் சேஸ், செர்பென் ரதபோர்ட் மற்றும் ஆகில் ஹொஸைன் ஆகியோரும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டிருந்த ஜேசன் ஹோல்டர், ரோவ்மன் பவெல் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
மே.தீவுகள் அணியானது குழு C இல் இடம்பெற்றுள்ளதுடன், இந்த குழாத்தில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மே.தீவுகள் குழாம்
ஷேய் ஹோப் (தலைவர்), சிம்ரொன் ஹெட்மையர், ஜோன்சன் சார்ல்ஸ், பிரெண்டன் கிங், ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ரோவ்மன் பவெல், செர்பேன் ரதபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், குவெண்டின் செம்சென், ஆகில் ஹொஸைன், குடகேஷ் மோட்டி, ஷெமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், மெதிவ் போட்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















