பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை ஒத்திவைத்தது PCB

Pakistan Super League 2025

7
PSL Posrponded

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபையுடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதன் கரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு இராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் கடந்த மே 8, 9ஆம் திகதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய 8 போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எனவும் திகதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

குறிப்பாக, ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபையுடன் ஒரு உடன்பாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எட்டத் தவறியதன் கரணமாக பாகிஸ்தன் சுப்பர் லீக் தொடரை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தரப்பில் வெளியான அறிக்கையில், ‘பாகிஸ்தான் பிரதமர் மியான் மொஹமட் ஷாபாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தனது உரிமையாளர்களின் ரபங்களிப்புகளை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, போட்டி முழுவதும் ஆதரவளித்த அதன் கூட்டாளிகள், உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தது.

முன்னதாக கடந்த 2016, 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரானது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<