இரோஷ் – அதீஷ ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் சோனகர் கழகத்திற்கு வெற்றி

76

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடாத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் (50) கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுக்கு வந்த போட்டி ஒன்றில், சோனகர் கிரிக்கெட் கழகம் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தினை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

இன்று (7) கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில்  ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சோனகர் கழக அணித்தலைவர் இரோஷ் சமரசூரிய முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கினார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

தொடர்ந்தும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் சிராஸ்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு மிலந்த அரைச்சதம் ஒன்றுடன் 66 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம் சோனகர் கழக அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற கேஷான் விஜேயரத்ன 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 214 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சோனகர் கிரிக்கெட் கழகம் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றத்தை காண்பித்த போதிலும் அதன் அணித்தலைவர் இரோஷ் சமசூரிய மற்றும் அதீஷ திலஞ்சன ஆகியோர் பொறுமையான முறையில் ஒரு ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

Photos: Tamil Union C & AC vs Moors SC | Major Limited Overs Tournament 2018/19

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு சோனகர் கிரிக்கெட் கழக அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 35.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது.

சோனகர் கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டத்தில் இரோஷ் சமரசூரிய அரைச்சதம் ஒன்றுடன் 92 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களை குவித்ததுடன், அதீஷ திலன்ஞன 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் யூனியன் அணிக்காக ஜீவன் மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 213 (45) – லஹிரு மிலந்த 66, றமித் ரம்புக்வெல 31, ரமேஷ் மெண்டிஸ் 22/4, கேஷான் விஜேயரத்ன 50/3

சோனகர் கிரிக்கெட் கழகம் – 214/4 (35.5) – இரோஷ் சமரசூரிய 76, அதீஷ திலன்ஞன 69*, ஜீவன் மெண்டிஸ் 43/2

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<