45-வது கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டம் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் இன்று காலை நடந்தது.

இதில் 14 முறை சாம்பியனான ஆர்ஜென்டினாஅமெரிக்கா அணிகள் மோதின. ஆர்ஜென்டினா வீரர்களின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் அமெரிக்க அணி திணறியது. ஆட்டம் முழுவதும் அந்த அணியின் ஆதிக்கமே இருந்தது.

இப்ராகிமோவிக்  ஓய்வை  அறிவிப்பு

ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே ஆர்ஜென்டினா முதல் கோலைப் போட்டது. லவாசி இந்த கோலை அடித்தார். 32-வது நிமிடத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி கோல் அடித்தார். இந்தப் போட்டித் தொடரில் அவர் அடித்த 5-வது கோல் இதுவாகும்.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஆர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பகுதி ஆட்டத்தில் அந்த அணி மேலும் 2 கோல்களை அடித்தது. கோன்சாலோ ஹிகுயின் இந்த 2 கோல்களையும் அடித்தார். 50 மற்றும் 86-வது நிமிடங்களில் இந்த கோல்களை அடித்தார். ஏற்கனவே அவர் கால்இறுதியில் 2 கோல் அடித்து இருந்தார்.

ஆட்டத்தின் இறுதி வரை அமெரிக்கா அணியால் ஒரு கோல் கூட போட இயலவில்லை. அந்த அளவுக்கு மெஸ்சி தலைமையிலான ஆர்ஜென்டினா வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. ஆர்ஜென்டினா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

அந்த அணி 28-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. மோசமாகத் தோல்வியை தழுவிய அமெரிக்க அணி 3-வது இடத்துக்கான போட்டியில் விளையாடும்.

2-வது அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் சிலிகொலம்பியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை சந்திக்கும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்