பந்துவீச்சில் அசத்திய டில்ருவான் பெரேரா, மலிந்த புஷ்பகுமார

53

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட முதல்தரக் கிரிக்கெட் தொடரில், இன்று (23) ஐந்து போட்டிகள் நிறைவுக்கு வந்தன.  

7 விக்கெட்டுகள் சாய்த்து அசத்திய அசித்த பெர்னாந்து

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A கழகங்கள் இடையே…….

இன்று முடிவுற்ற போட்டிகளில் ஒன்றில், நீர்கொழும்பு கிரிக்கெட் அணியினர் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 88 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தனர். இந்த வெற்றிக்கு, போட்டியின் இறுதி இன்னிங்ஸில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார நீர்கொழும்பு  அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு உதவ, அஷான் பிரியஞ்சன் 4 விக்கெட்டுக்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். 

எனினும், இலங்கை கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழக துடுப்பாட்ட வீரரான  டில்சான் முனவீர இன்றைய நாளில் அரைச்சதம் தாண்டி 77 ஓட்டங்கள் பெற்ற போதும் அவரது துடுப்பாட்டம் வீணாகியிருந்தது. 

இதேநேரம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றைய சுழல் வீரர்களான ப்ரபாத் ஜயசூரிய மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்ட அவர்களின் தரப்பு சோனகர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான மோதலில் 89 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது. 

அதேவேளை பதுரெலிய கிரிக்கெட் கழகம், சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிரான மோதலில் 22 வயது நிரம்பிய வலதுகை வேகப் பந்துவீச்சாளர் லஹிரு சமரக்கோன் கைப்பற்றிய 5 விக்கெட்டுக்களுடன் இலகு வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது. 

இதேநேரம், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க றாகம கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடி 169 ஓட்டங்கள் பெற்று முதல்தரப் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸினைப் பதிவு செய்திருந்தார். எனினும், NCC மைதானத்தில் நடைபெற்ற றாகம கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ் யூனியன் அணிகள் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

தமிழ் யூனியன் – றாகம அணிகள் இடையிலான போட்டி போன்று மக்கோனவில் நடைபெற்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் லங்கன் கிரிக்கெட் கழகம் இடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. 

போட்டிகளின் சுருக்கம் 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம் 

சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (71.3) ஹேஷான் தனுஷ்க 49, சத்துர ரன்துனு 4/30

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 264 (97.4) தினுக்க டில்சான் 118, டில்ருவான் பெரேரா 4/76, ப்ரபாத் ஜயசூரிய 3/82

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 254/7d (59) சதீர சமரவிக்ரம 52, சந்துஷ் குணத்திலக்க 51, சசித்ர சேரசிங்க 2/23

சோனகர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 116 (44.2) அனுக் பெர்னாந்து 33, டில்ருவான் பெரேரா 5/31, ப்ரபாத் ஜயசூரிய 5/69

முடிவுகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 89 ஓட்டங்களால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

 சர்ரேய் மைதானம், மக்கோன

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 229 (73) மலிங்க அமரசிங்க 76, சமிகர எதிரிசிங்க 4/61, மொஹமட் டில்ஷாட் 3/65

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 427 (112) சாலிய சமன் 96*, நவிந்து நிர்மல் 81, மிலிந்த சிறிவர்தன 69, சானக்க ருவன்சிரி 3/58

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 233/3 (69.5) சானக்க ருவன்சிரி 67*, ப்ரிமோஷ் பெரேரா 64, ப்ரமோத் மதுவன்த 2/61

முடிவு போட்டி சமநிலை அடைந்தது


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம் 

 மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 206 (51.5) திக்ஷில டி சில்வா 119*, லஹிரு சமரக்கோன் 5/86

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (91.5) லஹிரு மிலன்த 104, தமித் பெரேரா 53, அசித்த பெர்னாந்து 7/139

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 185 (60) ருமேஷ் புத்திக 67, சுமித் காதிகோங்கர் 56, லஹிரு சமரக்கோன் 5/71, புத்திக்க சஞ்சீவ 3/46

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 68/3 (15.1) T.M. சம்பத் 31

முடிவு பதுரெலிய கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

BRC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 142 (43) லசித் அபேய்ரத்ன 59, ரொஷேன் பெர்னாந்து 3/22

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 141 (35.5) பசிந்து லக்ஷன்க 43, அஷான் பிரியஞ்சன் 24/6, மலிந்த புஷ்பகுமார 4/58

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 369 (79.2) அஷான் பிரியஞ்சன் 84, சோனால் தினுஷ 75*, லக்ஷித ரசஞ்சன 5/126

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 282 (63.2) டில்சான் முனவீர 77, மலிந்த புஷ்பகுமார 5/102, அஷான் பிரியஞ்சன் 4/101 

முடிவு கொழும்பு கிரிக்கெட் கழகம் 88 ஓட்டங்களால் வெற்றி


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

NCC மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 421 (101.2) மனோஜ் சரசந்திர 114, ரன்மித் ஜயசேன 89, கித்ருவான் விதானகே 77, அமில அபொன்சோ 3/103

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 261/3 (76) நிஷான் மதுஷ்க 169, சமின்த பெர்னாந்து 135, ரொஷேன் சில்வா 51, ப்ரமோத் மதுஷான் 3/108 

முடிவுபோட்டி சமநிலை அடைந்தது

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<