சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சதம் விளாசிய திக்ஷில டி சில்வா

65

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட முதல்தரக் கிரிக்கெட் தொடரில் இன்று (21) ஐந்து போட்டிகள் ஆரம்பமாகின.

இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் நிறைவுக்கு வரும் போது இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்தார் இந்திய சுழல் பந்துவீச்சாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பிரகயன் ஓஜா தனது 33 ஆவது…

அந்தவகையில், இன்றைய நாளுக்கான போட்டிகளில் அசத்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தினை திக்ஷில டி சில்வா பெற்றிருந்தார். இலங்கை அணிக்காக 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் சில்வா, சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்கள் பெற்று சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், துரதிஷ்டவசமாக திக்ஷில டி சில்வாவின் சிலாப மேரியன்ஸ் அணியினர் BRC அணிக்கு எதிரான மோதலில் தமது முதல் இன்னிங்சுக்காக 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

இதேநேரம், தமிழ் யூனியன் கழகத்திற்காக விளையாடிவரும் மனோஜ் சரசந்திர 113 ஓட்டங்கள் எடுத்து, இன்றைய நாளில் பெறப்பட்ட இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார்.

துடுப்பாட்ட வீரர்கள் ஒருபுறமிருக்க, கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடும் தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான அஷான் பிரியஞ்சன், மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தங்களது அதிரடி பந்துவீச்சு மூலம் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு சவால் விடுத்திருந்தனர். இவர்களில் அஷான் பிரியஞ்சன் வெறும் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

இவர்கள் தவிர சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் BRC கழக வீரர், லஹிரு சமரக்கோன் 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் போட்டிகளின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (71.3) – ஹேஷான் தனுஷ்க 49, சத்துர ரன்துனு 4/30

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 43/2 (18) 

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 229 (73) – மலிங்க அமரசிங்க 76, சமிகார எதிரிசிங்க 4/61, மொஹமட் டில்சாட் 3/65

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 28/0 (3.5) 

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

இடம் – மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 206 (51.5) – திக்ஷில டி சில்வா 119*, லஹிரு சமரக்கோன் 5/86

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128/2 (34) – யஷோத லங்கா 51

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 

இடம் – BRC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 142 (43) – லசித் அபேரத்ன 59, ரொஷேன் பெர்னாந்து 3/22

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 141 (35.5) – பசிந்து லக்‌ஷங்க 43, அஷான் பிரியஞ்சன் 24/6, மலிந்த புஷ்பகுமார 4/58

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இடம் – NCC மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 369/6 (90) – மனோஜ் சரசந்திர 113, ரன்மித் ஜயசேன 81*, கித்ருவன் விதானகே 77, இஷான் ஜயரத்ன 2/72

இன்று ஆரம்பமான அனைத்து போட்டிகளதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<