சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சதம் விளாசிய ஷெஹான் ஜயசூரிய

102

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (15) ஐந்து போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

இன்று (15) நிறைவுக்கு வந்த போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் தங்களது திறமைகளை நிரூபித்திருந்தனர். 

முதல்தரப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய கசுன் ராஜித

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் உள்ளூர் முதல்தரக்கழகங்கள் இடையே…

பந்துவீச்சை நோக்கும் போது, அண்மையில் சர்வதேசப் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த SSC அணியின் சுழல் பந்துவீச்சாளரான சச்சித்ர சேனநாயக்க 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். சச்சித்ர சேனநாயக்க தவிர, NCC அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான திலேஷ் குணரத்னவும், சோனகர் கிரிக்கெட் கழக அணியின் சச்சித்திர சேரசிங்கவும் இன்றைய நாளில் 5 விக்கெட்டுக்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 119 (53) – லஹிரு திரிமான்ன 28, கசுன் ராஜித 8/31

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 321/5 (37) – நவிந்து விதானகே 83, சித்தார கிம்ஹான் 74, அமில அபொன்சோ 2/36

NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

இடம் – மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கட்டுநாயக்க

NCC (முதல் இன்னிங்ஸ்) – 312 (79) – சஹான் ஆராச்சிகே 128, சாமிக்க குணசேகர 50, அசித்த பெர்னாந்து 5/46

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 304 (88.1) – ஷெஹான் ஜயசூரிய 120, புலின தரங்க 56, திலேஷ் குணரத்ன 5/52

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 16/0 (6) 

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 155 (42.1) – ஹிமாஷ லியனகே 56, உபுல் இந்திரசிறி 3/73

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 484/9d (112.3) – சாட் நஸீம் 139, அஞ்செலோ ஜயசிங்க 87, அஷேன் சில்வா 67, துஷான் விமுக்தி 2/83

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 74/0 (18) -பத்தும் டில்ஷான் 45*,  லக்ஷான் எதிரிசிங்க 29*

Photos: Negombo CC Vs Army SC – Major League Tier A Tournament 2019/20

SSC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

SSC (முதல் இன்னிங்ஸ்) – 301 (76) – சந்துன் வீரக்கொடி 55, பிரபாத் ஜயசூரிய 5/89

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 183 (58.1) – ஹேஷான் தனுஷ்க 66, சச்சித்ர சேனநாயக்க 5/52, ஆகாஷ் சேனாரத்ன 3/24

SSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 114/5 (39) – சச்சித்ர சேனநாயக்க 33, பிரபாத் ஜயசூரிய 2/46

Photos: Colts CC v SSC | SLC Major League Tier ‘A’ tournament 2019/20

சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

இடம் – BRC மைதானம், கொழும்பு

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 353 (77.3) – சச்சித்ர சேரசிங்க 94, துவிந்து திலகரட்ன 3/103

BRC (முதல் இன்னிங்ஸ்) – 238 (64.5) – ரமிந்த விஜேசூரிய 61, சசித்ர சேரசிங்க 5/80, அதீஷ திலஞ்சன 2/24

சோனகர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 137 (31.1) – பபசார வடுகே 74, தரிந்து கெளசால் 4/30

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 2/0 (3)

Photos: BRC Vs Moors SC | Major League Tier A Tournament 2019/20

அனைத்துப் போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<