பிரீமியர் லீக் தொடரில் சோனகர் அணிக்கு முதல் வெற்றி

235

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் மூன்று பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (09) நிறைவடைந்தன.

 [rev_slider LOLC]

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இலங்கை இராணுவப்படை அணியை 21 ஓட்டங்களால் போராடி வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் இம்முறை பிரீமியல் லீக் தொடரில் முதல் வெற்றியை பெற்றுக் கொண்டது.

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வெறுமனே 90 ஓட்டங்களுக்கு சுருண்ட சோனகர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்சில் அணித்தலைவர் சாமர சில்வா பெற்றுக்கொண்ட 93 ஓட்டங்களுடன் 314 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி இலங்கை இராணுவப்படை அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் வேகப் பந்துவீச்சாளர் கோசல குலசேகர (4) மற்றும் எச்.ஆர்.சி. டில்ஷான் (2) மற்றும் தரிந்து ரத்னாயக்க (2) ஆகியோர் சோனகர் அணிக்காக சிறப்பாக பந்துவீசினர். இதனால் இராணுவப்படை அணி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சுப்பர் 8 போட்டிகளில் வெற்றியை தமதாக்கிய SSC, NCC, துறைமுக அணிகள்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர்…

சோனகர் விளையாட்டுக் கழகம் ஆரம்ப சுற்றில் ஆறு போட்டிகள் மற்றும் முன்னர் நடந்த பிளேட் கேடயத்திற்கான போட்டிகள் எதிலும் வெற்றி பெறாத நிலையிலேயே முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 90 (29.2) – பிரிமோஷ் பெரேரா 23*, யசோத மெண்டிஸ் 4/32, துஷான் விமுக்தி 3/18, சீகுகே பிரசன்ன 2/29

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 211 (55.4) – லியோ பிரான்சிஸ்கோ 58, அஜந்த மெண்டிஸ் 37, யசோத மெண்டிஸ் 29, டில்ஷான் டி சொய்சா 27, HRC டில்ஷான் 5/75, கோசல குலசேகர 2/36, தரிந்து ரத்னாயக்க 2/36

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 314 (83.5) – சாமர சில்வா 93, கோசல குலசேகர 66, சரித்த குமாரசிங்க 38, பபசர வாதுகே 37, மல்க மதுசங்க 4/82

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 172 (46.2) – சீகுகே பிரசன்ன 51, அஜந்த மெண்டிஸ் 48, துஷான் விமுக்தி 25, கோசல குலசேகர 4/47, தரிந்து ரத்னாயக்க 3/40, HRC டில்ஷான் 3/63

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 21 ஓட்டங்களால் வெற்றி


ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அனுக் பெர்னாண்டோவின் சதங்கள் மூலம் பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு துடுப்பாட்டத்தில் பதிலடி கொடுத்த ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பதுரெலிய விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சில் 423 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 250 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் நெருக்கடியுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பளூம்பீல்ட் அணி முதல் நான்கு விக்கெட்டுகளையும் 94 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தபோதும் 5ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அனுக் பெர்னாண்டோ பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன் மூலம் கடைசி நாள் ஆட்ட நேரம் முடியும் போது ப்ளூம்பீல்ட் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 295 ஓட்டங்களை பெற்றது. ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அனுக் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது தலா 102 ஓட்டங்களை குவித்தனர்.

போட்டியின் சுருக்கம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (51) – நிசல் பிரான்சிஸ்கோ 35, லஹிரு பெர்னாண்டோ 32, கோஷான் தனுஷ்க 31, நிபுன் ஹக்கல 20, சவித் பிரியன் 4/69, டிலேஷ் குணரத்ன 2/25, மதுர லக்மால் 2/25

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 423/9d (156) – நதீர நாவல 124, பதும் நிஸ்ஸங்க 111, ஷிரான் ரத்னாயக்க 46, ரமிந்து டி சில்வா 31, சஞ்சய சதுரங்க 24, மலித் டி சில்வா 4/77

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 295/4 (68) – ரமேஷ் மெண்டிஸ் 102*,  அனுக் பெர்னாண்டோ 102*, லஹிரு ஜயகொடி 61, அலங்கார அசங்க 2/91

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்ட தமிழ் யூனியன் கழகம் ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது.

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இலங்கைக்கு அதிக வாய்ப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…

 இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க 245 ஓட்டங்களை பெறவேண்டிய நெருக்கடியுடன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி கடைசி நாள் ஆட்டநேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது 41 வயதான சுழல் பந்து வீச்சாளர் தினுக்க ஹெட்டியாரச்சி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி இலங்கை முதல்தர கிரிக்கெட் வரலாற்றி 950 விக்கெட்டுகளை எட்டிய மூன்றாவது வீரராக பதிவாவதற்கு அவருக்கு இன்னும் 5 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன. இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களாக முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் காணப்படுகின்றனர். ஹெட்டியாரச்சி இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 197 (65) – தரங்க பரணவிதான 69, சிதார கிம்ஹான் 42, ரமித் ரம்புக்வெல்ல 28, தினெத் திமோத்ய 24, தினுக்க ஹெட்டியாரச்சி 6/64, சச்சித் பதிரண 2/05

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 442 (100.1) – லசித் அபேரத்ன 115, சச்சித் பதிரண 70, அஷான் பிரியஞ்சன் 66, மலிந்து மதுரங்க 49, ரொன் சந்திரகுப்தா 37, கவீன் பண்டார 31, ரமித் ரம்புவெல்ல 3/135, தரங்க பரணவிதான 2/00

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 251/5 (83.1) – சிதார கிம்ஹான் 69, தினுக்க விக்ரமனாயக்க 53, தரங்க பரணவிதான 51*, கித்ருவன் விதானகே 31, தினெத் திமோத்ய 22, தினுக் ஹெட்டியாரச்சி 5/108

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது