செல்சியின் தொடர் வெற்றிக்கு முடிவுகட்டிய வெஸ்ட் ஹாம்

106

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. இதில் செல்சி அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்ததோடு, எவர்டனுடனான போட்டியில் ஆர்சனல் வெற்றியீட்டியது.

செல்சி எதிர் வெஸ்ட் ஹாம் யுனைடெட்

லண்டன் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியுடனான போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலை பெற்றதை அடுத்து இம்முறை பிரீமியர் லீக்கில் செல்சி அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்ததோடு முதல் முறை அவ்வணி வெற்றிக்கான புள்ளிகளை இழந்தது.

லிவர்பூல் அணிக்கு அடுத்தடுத்து 6ஆவது வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக்…

முதல் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற செல்சி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை பின்தள்ள இரண்டு கோல்கள் தேவைப்படும் நிலையிலேயே வெஸ்ட் ஹாம் கழகத்தை எதிர்கொண்டது.

எனினும், போட்டியில் ஆதிக்கம் செலுத்திய செல்சியின் கோல் ஒன்றை பெறும் வாய்ப்பு கடைசிவரை கைகூடவில்லை.

சொந்த மைதானத்தில் ஆடிய வெஸ்ட் ஹாம்மின் மைக்கல் அன்டோனியோ இரண்டு கோல் வாய்ப்புகளை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் இடைவேளைக்கு முன் கோல் பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்றை செல்சி தவறவிட்டது. வில்லியன் சாதுரியமாக உதைத்த பந்தை நிகோலோ கான்டே தலையால் முட்டியபோது அது வெளியே பறந்தது.     

முதல் பாதி: செல்சி 0 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடெட்

போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து இழுபறி நீடித்தது. செல்சியின் பதில் வீரராக வந்த அல்வாரோ மொராடஸ் வலையை நோக்கி உதைத்த பந்து வெஸ்ட் ஹாம் கோல்காப்பளர் லூகாஸ் பபியன்ஸ்கியின் முகத்தில் பட்டு தடைப்பட்டது. தொடர்ந்து ரோஸ் பார்க்லே கோலை நோக்கி உதைத்த பந்தையும் பபியன்ஸ்கி தடுத்தார்.     

போட்டியின் 70 வீதத்திற்கு அதிகமான நேரம் செல்சி வீரர்களின் கால்களிலேயே பந்து சுழன்றபோதும் இரண்டாவது பாதியிலும் எந்த கோலும் விழவில்லை.

சிவப்பு அட்டை பெற்று கண்ணீரோடு வெளியேறிய ரொனால்டோ

ஜுவண்டஸ் அணிக்காக …

வெஸ்ட் ஹாம் இதுவரை ஆடிய ஆறு பிரீமியர் லீக் போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றி பெற்று 17 ஆவது இடத்தில் உள்ளது. எனினும் அந்த அணி கடந்த வாரம் எவர்டன் உடனான போட்டியில் வென்றது நல்ல முன்னேற்றத்தை காட்டியுள்ளது.

மறுபுறம் வரும் சனிக்கிழமை (29) லிவர்பூல் அணியை எதிர்கொள்ளவிருக்கும் செல்சி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.        

முழு நேரம்: செல்சி 0 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடெட்


ஆர்சனல் எதிர் எவர்டன்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் மூன்று நிமிட இடைவேளையில் பெற்ற இரண்டு கோல்கள் மூலம் எவர்டன் கழகத்தை வீழ்த்திய ஆர்சனல் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்க முன்னேற்றம் கண்டது.

1996 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் முதல் முறை ஆர்சனலை வீழ்த்தும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய எவர்டன் ஆரம்பத்தில் கோல் வாய்ப்புகளை உருவாக்க கடுமையாக போராடியது.  

எவர்டன் முன்கள வீரர்களான ரிசார்லிசன் மற்றும் டொமினிக் கல்வெர்ட் லுவிஸ் பல வேகமான உதைகளை விட்டபோதும் ஆர்சனல் கோல்காப்பாளர் பெடிர் செச்சை தாண்டி வலைக்குள் செலுத்துவது கடிமான இருந்தது.   

UEFA சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பார்சிலோனா மற்றும் லீவர்பூல்

மறுபுறம் ஆர்சனல் அணி முதல் பாதியின் பெரும்பாலான நேரம் பந்தை தம் வசம் வைத்திருந்தபோதும் நெருங்கிய கோல் வாய்ப்பொன்றை பெற தடுமாற்றம் கண்டது.

முதல் பாதி: ஆர்சனல் 0 – 0 எவர்டன்

போட்டியின் 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்கள வீரர் அலெக்சான்ட்ரே லுகசெட் பெனால்டி எல்லைக்குள் இருந்து லாவகமாக உதைத்த பந்து வளைந்து சென்று கோலாக மாறியது. இதன்மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற ஆர்சனல் அடுத்த மூன்று நிமிடத்தில் இரண்டாவது கோலையும் போட்டது. அவுபமயாங் பெரிதாக நெருக்கடி இன்றி அந்த கோலை புகுத்தினார்.  

இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி 12 புள்ளிகளுடன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விடவும் 6 புள்ளிகள் குறைவாக உள்ளது.     

முழு நேரம்: ஆர்சனல் 2 – 0 எவர்டன்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க