சேரசிங்கவின் இரட்டைச் சதத்தால் தமிழ் யூனியனுக்கு வெற்றி வாய்ப்பு

185

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் நான்கு ‘சுப்பர் 8’ போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தன.

SSC எதிர் தமிழ் யூனியன் கழகம்

அனுபவ வீரர் சச்சித்ர சேரசிங்கவின் இரட்டைச் சதம் மற்றும் ரமித் ரம்புவெல்லவின் வேகமான சதத்தின் மூலம் SCC அணிக்கு எதிராக தமிழ் யூனியன் அணி முதல் இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றது.

முதல் தர கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் இலங்கை வீரர்கள்

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ் யூனியன் அணிக்காக சேரசிங்க 204 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய பின்வரிசையில் வந்த ரமித் ரம்புக்வெல்ல 10 சிக்ஸர்களுடன் 124 ஓட்டங்களை விளாசினார்.

இதன் மூலம் தமிழ் யூனியன் அணி முதல் இன்னிங்ஸில் 536 ஓட்டங்களை பெற்றது. முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த SSC அணி 129 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பந்துவீச்சில் இரட்டைச் சதம் குவித்த சேரசிங்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.1) – கௌஷால் சில்வா 65, தம்மிக்க பிரஸாத் 50, கிறிஷான் ஆரச்சிகே 48, ரமித் ரம்புக்வெல்ல 5/89, தமித்த சில்வா 3/33,

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 536 (133.3) – சச்சித்ர சேரசிங்க 204, ரமித் ரம்புவெல்ல 124, லஹிரு மிலன்த 56, தரங்க பரணவிதான 47, ஆகாஷ் சேனாரத்ன 4/73, கசுன் மதுஷங்க 2/82

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 129/4 (32.2) – சந்துன் வீரக்கொடி 68, கௌஷால் சில்வா 46, சச்சித்ர சேரசிங்க 3/10


NCC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

மாலிங்க அமரசிங்கவின் சதத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 402 என்ற இமாலய ஓட்டங்களை பெற்றிருக்கும் NCC அணி 355 ஓட்டங்களால் முன்னிலை பெற்று கோல்ட்ஸ் அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்கவுள்ளது.

இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணியின் மத்திய பின்வரிசையில் சகலதுறை வீரரான அமரசிங்க ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களை பெற்றதோடு பின்வரிசையில் சாரங்க ராஜகுரு 78 ஓட்டங்களை பெற்றார். இந்த இருவரும் 9ஆவது விக்கெட்டுக்காக 164 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 251 (56.1) – லஹிரு உதார 85, நிமேஷ் குணசிங்க 44, அகில தனஞ்சய 5/72, ஜெஹான் டானியல் 2/46

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 298 (111.2) – ஜெஹான் டானியல் 67, நிஷான் மதுஷ்க 67, பிரியமால் பெரேரா 51, சச்சின்த பீரிஸ் 4/87, லசித் எம்புல்தெனிய 4/101

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 402/9 (108) – மாலிங்க அமரசிங்க 107*, சாரங்க ராஜகுரு 78, ஹிசித்த போயகொட 66, சங்கீத் குரே 4/111, அகில தனஞ்சய 2/103


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் CC

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஒன் (follow on) செய்திருக்கும் சிலாபம் மேரியன்ஸ் சரசென்ஸ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க மேலும் 198 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

பிரமோத் மதுவன்தவின் இரட்டைச் சதத்தால் சரசென்ஸ் முதல் இன்னிங்ஸில் 524 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் 312 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யசோத லங்கா 109 ஓட்டங்களை பெற்றார். 19 வயது சுழல் பந்துவீச்சாளர் ஹரீன் வீரசிங்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து பலோ ஒன் செய்த சிலாபம் மேரியன்ஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 524 (165.1) – பிரமோத் மதுவன்த 217, கமிந்து கனிஷ்க 109, நிபுன் கருனநாயக்க 80, ஹரீன் வீரசிங்க 29, நிமேஷ் விமுக்தி 4/92, சாகர் பரேஷ் 4/129, சதுரங்க குமார 2/84

சிலாபம் மேரியன்ஸ் CC (முதல் இன்னிங்ஸ்) – 312 (87.5) – யசோத லங்கா 109, ஓஷத பெர்னாண்டோ 65, நிமேஷ் விமுக்தி 51, ஹரீன் வீரசிங்க 5/90, மொஹமட் டில்ஷான் 2/59,

சிலாபம் மேரியன்ஸ் CC (முதல் இன்னிங்ஸ்) F/O – 14/2 (9) – மொஹமட் டில்ஷாட் 2/2


இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் CCC

பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் CCC அணிக்கு எதிராக இராணுவப்படை அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு போராடி வருகிறது.

வீரர்களை உள்வாங்க எனக்கும் இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர் – ஹரீன் பெர்னாண்டோ

இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த CCC அஷான் பிரியன்ஜன் பெற்ற 180 ஓட்டங்களின் உதவியோடு 464 ஓட்டங்களை குவித்தது. முதல் இன்னிங்ஸில் 170 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இராணுவப்படை அணி ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களுடன் ஸ்திரமான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 295 (105.3) – லக்ஷான் எதிரிசிங்க 61, ஹிமேஷ லியனகே 44, டில்ஷான் டி சொய்ஸா 40, மலிந்த புஷ்பகுமார 6/107, லஹிரு மதுஷங்க 2/32

CCC (முதல் இன்னிங்ஸ்) – 464 (123.5) – அஷேன் பிரியன்ஜன் 180, வனிந்து ஹசரங்க 97, சொனால் தினூஷ 40, துஷான் விமுக்தி 6/135, ருச்சிர தரிந்திர 2/123

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 133/2 (38) – லக்;ஷான் எதிரிசிங்க 42, துஷான் விமுக்தி 32*

போட்டியின் நான்காவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<