இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி

89
PDS Kularatna vs St. Jones College

யாழ்ப்பாணம் சென் . ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றும் இன்றும் (7,8) இடம்பெற்றிருந்த அம்பலாங்கொடை பி. டி. ஈ. எஸ் குலரத்ன கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய மோதல் இன்றைய தினம் சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் சௌமியன் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தார். 

இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிராக இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில்..

பந்துவீச்சில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்காக தொடர்ச்சியாக சோபித்துவரும் இளம் சுழல் பந்து வீச்சாளர் சரண் மேலும் ஒரு ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். 

தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் உப தலைவர் டினோசன் ஏழாம் இலக்கத்தில் களமிறங்கி  பருவகாலத்தில் கல்லூரியின் முதலாவது சதத்தினை பதிவு செய்தார். முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான வினோஜன் 78 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சௌமியன் 47 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்து சிறந்த ஒரு ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர். 

9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 325 ஓட்டங்களினை பெற்றிருக்கையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் முதலாவது இன்னிங்சுக்காக தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டனர். 

224 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்  இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குலரத்ன கல்லூரி அணியின் முதல் 5 விக்கெட்டுக்களையும் சென். ஜோன்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சு ஜோடியான விதுசன், சரண் 80 ஓட்டங்களுக்கு சாய்த்தனர்.

ஆறாவது விக்கெட்டிற்காக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தரிந்து ஹர்ஷனவுடன் கவீஷ சத்சற ஜோடி சேர 114  ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருக்கையில் கவீஷ 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய தரிந்து சதம் கடந்து ஆட்டமிழந்தார். 

இரண்டாவது இன்னிங்சுக்காக குலரத்ன கல்லூரியினர் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்த நிலையில் 209 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கையில் ஆட்ட நேரம் நிறைவுக்கு வர போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

போட்டியை வெற்றி பெற அதிக வாய்ப்புக்கள் இருந்தபோதும், இறுதி நேரத்தில் களத்தடுப்பில் தடுமாறிய சென். ஜோன்ஸ் வீரர்கள் வெற்றியை தவறவிட்டிருந்தனர். 

உபாதை காரணமாக இலங்கை தொடரை இழக்கும் ரோரி பேர்ன்ஸ்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்..

இரண்டு இன்னிங்சுகளிலும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இளம் பந்துவீச்சாளரான யோகதாஸ் விதுசன், சென். ஜோன்ஸின் நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்திவருகின்றார்.

போட்டியின் சுருக்கம்

PDS குலரத்ன கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்) – 101 (39.1) – குமிந்து நில்ஹற 44, யோகதாஸ்  விதுசன் 6/33, அன்ரன் சரண் 2/10 

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 325/9 (72) – தெய்வேந்திரம் டினோசன் 100, வினோஜன் 78, நாகேந்திரராஜா சௌமியன் 47, கவீஷ் சத்சற 3/89, கல்ப ஹர்சஜித் 2/25

PDS குலரத்ன கல்லூரி, அம்பலாங்கொடை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 209/9 (78) – தரிந்து ஹர்ஷன 104, கவீஷ சத்சற 44, யோகதாஸ் விதுசன் 5/65, அன்ரன் சரண் 2/30

போட்டி முடிவு – முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகளடிப்படையில் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<