LG Abans நிறுவனத்தின் தூதுவராக பெதும் நிஸ்ஸங்க நியமனம்

LG | Abans Ambassador – Pathum Nissanka

10
LG | Abans Ambassador – Pathum Nissanka

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க எல் ஜி – அபான்ஸ் (LG Abans) நிறுவனத்தின் விளம்பர தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல தசாப்தங்களாக, அபான்ஸ் நிறுவனத்தின் மூலம் இலங்கை மக்களுக்கு கொண்டு வரப்பட்ட LG வீட்டு உபகரணங்களும் மின்னணு சாதனங்களும் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்து வருகின்றன.

>>T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு<<

தரம், நம்பகத்தன்மை மற்றும் புதுமைகளை தொடர்ச்சியாக வழங்கும் LG நிறுவனத்தை, சர்வதேச கிரிக்கெட்டில் உயர்தர நிலைத்தன்மை மற்றும் உறுதியை நிரூபித்துள்ள பெதும் நிஸ்ஸங்க தற்போது பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். இது “Life’s Good” என்ற LG-யின் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த அடையாளமாகும்.

Abans நிறுவனம் இலங்கையின் வீட்டு மின்னணு துறையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவை அமைப்பின் மூலம், LG-யின் புதுமையான தயாரிப்புகள் அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதை அது உறுதி செய்துள்ளது.

LG மற்றும் Abans ஆகிய நிறுவனங்கள் பெதும் நிஸ்ஸங்கவுடன் ஒன்றிணைந்து நிலைத்த தரம், முன்னோடியான சிந்தனை மற்றும் சிறந்த சாதனைகளைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரே பாதையில் பயணிக்கவுள்ளன என்ற அறிவிப்பை எல் ஜி – அபான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<