இந்த ஆண்டு (2024) T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கான பயிற்சிப் போட்டிகளுக்குரிய அட்டவணை ஐ.சி.சி. (ICC) மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
>>இலங்கை வரும் மே.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி!<<
அந்தவகையில் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஜூன் 1 வரை T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான பயிற்சிகளில் ஈடுபடும் வகையில் பயிற்சிப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மொத்தமாக 16 பயிற்சிப் போட்டிகள் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, பயிற்சிப் போட்டிகளுக்காக டெக்ஸாஸ், ப்ளோரிடா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அதேவேளை தொடரில் மொத்தமாக 17 பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவிருப்பதோடு, பயிற்சிப் போட்டிகளுக்கு மேலதிகமாக தென்னாபிரிக்க அணியானது தமது வீரர்கள் இடையே மற்றுமொரு பயிற்சிப் போட்டியினையும் எதிர்வரும் 29ஆம் திகதி ஒழுங்கு செய்திருக்கின்றது.
இதேவேளை இம்மாதம் 30ஆம் திகதி ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெறவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி, இரசிகர்களுக்கு பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மே 27
கனடா எதிர் நேபாளம், டெக்ஸாஸ்
ஒமான் எதிர் பபுவா நியூ கினியா, ட்ரினிடாட் டொபாகோ
நமீபியா எதிர் உகண்டா, ட்ரினிடாட் டொபாகோ
மே 28
இலங்கை எதிர் நெதர்லாந்து, ப்ளோரிடா
பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அமெரிக்கா, டெக்ஸாஸ்
அவுஸ்திரேலியா எதிர் நமீபியா, ட்ரினிடாட் டொபாகோ
மே 29
தென்னாபிரிக்க வீரர்களிடையேயான பயிற்சிப் போட்டி, ப்ளோரிடா
ஆப்கானிஸ்தான் எதிர் ஓமான், ட்ரினிடாட் டொபாகோ
மே 30
நேபாளம் எதிர் ஐக்கிய அமெரிக்கா, டெக்ஸாஸ்
ஸ்கொட்லாந்து எதிர் உகண்டா, ட்ரினிடாட் டொபாகோ
நெதர்லாந்து எதிர் கனடா, டெக்ஸாஸ்
நமீபியா எதிர் பபுவா நியூ கினியா, ட்ரினிடாட் டொபாகோ
மேற்கிந்திய தீவுகள் எதிர் அவுஸ்திரேலியா, ட்ரினிடாட் டொபாகோ
மே 31
அயர்லாந்து எதிர் இலங்கை, ப்ளோரிடா
ஸ்கொட்லாந்து எதிர் ஆப்கானிஸ்தான், ட்ரினிடாட் டொபாகோ
ஜூன் 01
பங்களாதேஷ் எதிர் இந்தியா, TBC
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<