சன்ரைஸர்ஸ் அணியின் தலைவராக மாறும் பேட் கம்மின்ஸ்

100
Pat Cummins

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் இந்தப் பருவத்திற்கான IPL தொடரில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க இல்லாதது புதிய வாய்ப்பு – கிறிஸ் சில்வர்வூட்

அந்தவகையில் கடந்த IPL பருவத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக செயற்பட்ட எய்டன் மார்க்ரமினை பேட் கம்மின்ஸ் புதிய IPL பருவத்தில் தலைவராக பிரதியீடு செய்கின்றார்.

பேட் கம்மின்ஸை இந்தப் பருவத்திற்கான IPL ஏலத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியானது இந்திய நாணயப்படி 20.50 கோடி ரூபாய்களுக்கு கொள்வனவு செய்திருந்தது.

பேட் கம்மின்ஸின் கொள்வனவினை அடுத்து அவரே புதிய பருவத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினையும் தலைவராக வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலையே அவருக்கு தலைவர் பதவியும் தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை புதிய தலைமை பயிற்றுவிப்பாளரான டேனியல் வெட்டோரியினையும் பெற்றிருக்கும் சன்ரைஸர்ஸ் அணியானது தமது பயிற்சியாளர்கள் குழாத்தில் புதிதாக நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பிராங்ளினை உள்வாங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேவேளை இந்த ஆண்டுக்கான IPL தொடர் இம்மாதம் 22ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<