Home Tamil தசுன் ஷானக்கவின் அதிரடியோடு T20I தொடரை சமநிலை செய்த இலங்கை

தசுன் ஷானக்கவின் அதிரடியோடு T20I தொடரை சமநிலை செய்த இலங்கை

Pakistan tour of Sri Lanka 2026

31
Dasun Shanaka

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> நியூசிலாந்து தொடரிலிருந்து விலகும் ரிஷப் பண்ட்

அதேவேளை இந்த வெற்றியுடன் இலங்கை வீரர்கள், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரினையும் 1-1 என சமநிலை செய்து நிறைவு செய்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று, தொடரின் இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டிருக்க மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.

மழையினால் அணிக்கு 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அகா, முதலில் இலங்கையினை துடுப்பாடப் பணித்தார். இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த பெதும் நிஸ்ஸங்க ஓட்டமேதுமின்றி ஆட்டமிழக்க, மற்றுமொரு வீரரான காமில் மிஷார அதிரடியாக ஆடி 8 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 20 ஓட்டங்கள் பெற்றார்.

அதேவேளை குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க ஆகிய வீரர்களும் மைதானத்தினை பௌண்டரிகளால் அலங்கரிக்க இலங்கை அணியானது 12 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தசுன் ஷானக்க 5 சிக்ஸர்கள் அடங்கலாக வெறும் 9 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார். மெண்டிஸ் 16 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளோடு 30 ஓட்டங்கள் பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் வசீம் ஜூனியர் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த போதும் 3 விக்கெட்டுக்களை சுருட்டினார். அதேவேளை நசீம் ஷாஹ், மொஹமட் நவாஸ் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணிக்கு அதன் தலைவர் அதிரடியான ஆரம்பம் வழங்கிய போதும் அவ்வணியானது 12 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்கள் மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் சல்மான் அகா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மதீஷ பதிரன 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது வனிந்து ஹஸரங்கவிற்கு வழங்கப்பட, தொடர் நாயகனாகவும் வனிந்து ஹஸரங்க தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

Result
Pakistan
146/8 (12)
Sri Lanka
160/6 (12)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Faheem Ashraf b Naseem Shah 0 2 0 0 0.00
Kamil Mishara  c Khawaja Nafay b Mohammad Wasim Jnr 20 8 3 1 250.00
Kusal Mendis c Usman Khan b Mohammad Wasim Jnr 30 16 2 2 187.50
Dhananjaya de Silva c Sahibzada Farhan  b Mohammad Nawaz 22 15 4 0 146.67
Charith Asalanka c & b 21 13 1 1 161.54
Dasun Shanaka c Saim Ayub b Mohammad Wasim Jnr 34 9 0 0 377.78
Janith Liyanage  not out 22 8 3 0 275.00
Wanindu Hasaranga not out 1 1 0 0 100.00
Extras 10 (b 0 , lb 3 , nb 0, w 7, pen 0)
Total 160/6 (12 Overs, RR: 13.33)
Bowling O M R W Econ
Naseem Shah 3 0 35 1 11.67
Mohammad Wasim Jnr 3 0 54 3 18.00
Abrar Ahmed 2 0 22 0 11.00
Shadab Khan 2 0 19 0 9.50
Mohammad Nawaz 1 0 8 1 8.00
Faheem Ashraf 1 0 19 1 19.00

Batsmen R B 4s 6s SR
Sahibzada Farhan  b 9 7 2 0 128.57
Saim Ayub c Eshan Malinga b Wanindu Hasaranga 6 5 1 0 120.00
Agha Salman c Eshan Malinga b Matheesha Pathirana 45 12 5 3 375.00
Usman Khan c Pathum Nissanka b Wanindu Hasaranga 1 3 0 0 33.33
Mohammad Nawaz b Matheesha Pathirana 28 15 12 2 186.67
Khawaja Nafay c Dhananjaya de Silva b Wanindu Hasaranga 26 15 1 1 173.33
Shadab Khan c Eshan Malinga b Wanindu Hasaranga 6 3 0 1 200.00
Faheem Ashraf run out (Kusal Mendis) 9 3 2 0 300.00
Mohammad Wasim Jnr not out 7 8 0 1 87.50
Naseem Shah not out 1 1 0 0 100.00
Extras 8 (b 0 , lb 1 , nb 0, w 7, pen 0)
Total 146/8 (12 Overs, RR: 12.17)
Bowling O M R W Econ
Mahesh Theekshana 2 0 27 0 13.50
Eshan Malinga 2 0 27 1 13.50
Matheesha Pathirana 3 0 34 2 11.33
Wanindu Hasaranga 3 0 35 4 11.67
Dhananjaya de Silva 2 0 22 0 11.00

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<