நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!

Pakistan tour of Netherlands 2022

124

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி முதன்முறையாக இருதரப்பு தொடர் ஒன்றில் விளையாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஐசிசியின் ஒருநாள் சுபர் லீக் தொடருக்கான போட்டிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் பொலார்ட்

இந்த போட்டித்தொடரானது கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் நெதர்லாந்தின் வி.ஓ.சி மைதானத்தில் ஆகஸ்ட் 16, 18 மற்றும் 21ம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இதற்கு முதல் மூன்று தடவைகள் ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. 1996, 2003 உலகக்கிண்ணங்கள் மற்றும் 2002ம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஷ் கிண்ணம் போன்ற தொடர்களில் மோதியுள்ளதுடன், மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐசிசி சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளதுடன், நெதர்லாந்து அணி 12 போட்டிகளில் இரண்டில் மாத்திரம் வெற்றிபெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<