சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் பொலார்ட்

144
 

மேற்கிந்திய தீவுகளை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வழிநடாத்தும் கீய்ரோன் பொலார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார்.

மரணமடைந்த பங்களாதேஷ் முன்னாள் கிரிக்கெட் வீரர்

அதிரடி சகலதுறை வீரரான கீய்ரோன் பொலார்ட் தான் ஓய்வு பெறும் விடயத்தினை, தனது இன்ஸ்டாக்கிரம் (Instagram) சமூக வலைதள கணக்கு மூலம் உறுதி செய்திருக்கின்றார்.

அதன்படி, ”கவனமாக யோசித்ததன் பின்னர், நான் இன்று சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்க தீர்மானித்திருக்கின்றேன்.” என இன்ஸ்டாக்கிராம் மூலமாக குறிப்பிட்ட பொலார்ட், 2007ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக அறிமுகம் பெற்று கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனது தாயக அணியினை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவம் செய்ததன் காரணமாக பெருமையடைவதாக தெரிவித்திருக்கின்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் அடங்கலாக 101 T20i போட்டிகளில் ஆடியிருக்கும் பொலார்ட், 4275 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, 97 விக்கெட்டுக்களையும் சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஒருநாள், T20 அடங்கலாக மொத்தம் 61 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியினை வழிநடாத்தியிருக்கும் பொலார்ட் தனது தலைமையில் 25 வெற்றிகளையும், 31 தோல்விகளையும் பதிவு செய்திருக்கின்றார். இதேவேளை, பொலார்ட் வழிநடாத்திய 5 போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி சமநிலை அடைந்திருக்கின்றன.

இலங்கை டெஸ்ட் தொடருக்காக நாடு திரும்பினார் சகிப்

அதேநேரம், இறுதியாக நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினை வழிநடாத்தியிருந்த பொலார்ட், தற்போது இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவருகின்றார்.

இதேநேரம், பொலார்ட்டின் ஓய்வினை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் புதிய தலைவர் ஒருவர் மூலம் வழிநடாத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<