T20 உலகக் கிண்ணத்தின் பின் பங்களாதேஷ் செல்லும் பாகிஸ்தான் அணி

125
AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணம் நிறைவுற்றதன் பின்னர், எதிர்வரும் நவம்பர் மாதம் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் மாலிங்க!

அந்தவகையில், பாகிஸ்தானின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் உள்ளடங்கும் டெஸ்ட் தொடராக அமையும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள T20 தொடருடன் ஆரம்பிக்கவிருப்பதோடு, அதன் பின்னர் இரு அணிகளும் பங்கெடுக்கும் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இதேநேரம் இரு அணிகளுக்குமிடையிலான T20 தொடரின் அனைத்துப் போட்டிகளும் டாக்கா மைதானத்தில் இடம்பெற, டெஸ்ட் தொடர் டாக்கா மற்றும் சட்டோக்ராம் ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பாகிஸ்தான் அணி, கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் பங்களாதேஷ் மண்ணில் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் தொடராகவும் பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் அமைகின்றன.

ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

ஏற்கனவே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரினை மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருடன் ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு பங்களாதேஷ் வீரர்களுடனான தொடர், இரண்டாவது பருவகாலத்திற்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டாவது தொடராக அமைகின்றது.

பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என இரண்டாம் இடத்தில் காணப்பட, பங்களாதேஷ் அணிக்கு பாகிஸ்தான் அணியுடனான தொடரே, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் தொடராகும்.

தொடர் அட்டவணை

 T20 தொடர் அட்டவணை

  •  முதல் T20 போட்டி – நவம்பர் 19 – டாக்கா
  •  இரண்டாவது T20 போட்டி – நவம்பர் 20 – டாக்கா
  •  மூன்றாவது T20 போட்டி – நவம்பர் 22 – டாக்கா

 டெஸ்ட் தொடர் அட்டவணை

  •  முதல் டெஸ்ட் – நவம்பர் 26-30 – சட்டோக்ராம்
  •  இரண்டாவது டெஸ்ட் – டிசம்பர் 04-08 – டாக்கா

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<