Home Tamil த்ரில் வெற்றியுடன் முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி

த்ரில் வெற்றியுடன் முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி

Sri Lanka tour of Pakistan 2025

1
Sri Lanka tour of Pakistan 2025

ராவல்பிண்டியில் இன்று (27) இடம்பெற்று முடிந்த இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முத்தரப்பு T20I தொடரின் ஆறாவது மற்றும் இறுதி லீக் மோதலில் இலங்கை 6 ஓட்டங்களால் பரபரப்பான த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>ILT20 தொடர் புதிய பருவத்தில் டுபாய் அணியின் தலைவராகும் ஷானக

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை உறுதி செய்வதோடு தமது இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் முதன் முறையாக பாகிஸ்தானையும் தோற்கடித்திருக்கின்றது.

போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி அகா முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்கள் பெற்றது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தன்னுடைய இரண்டாவது T20I அரைச்சதம் பூர்த்தி செய்த கமில் மிஷார 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 48 பந்துகளில் 76 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் குசல் மெண்டிஸ் 23 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அப்றார் அஹ்மட் மாத்திரம் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பின்னர் 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது, இலங்கை அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. ஆரம்பத்தில் அவ்வணி 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து திணறிய போதும் அவ்வணிக்கு உஸ்மான் கான் மற்றும் அணித்தலைவர் சல்மான் அகா ஆகியோர் சிறிது நம்பிக்கை வழங்கினர்.

தொடர்ந்து உஸ்மான் கான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் நிதானம் கலந்த அதிரடியுடன் ஆடிய சல்மான் அகா பாகிஸ்தானை வெற்றிக்கு நெருக்கமாக அழைத்துச் சென்ற போதும் போட்டியின் இறுதி ஓவரினை வீசிய துஷ்மன்த சமீர 10 ஓட்டங்களே வெற்றிக்கு தேவைப்பட்டிருக்க, திருப்புமுனையான இறுதி ஓவரினை வீசி, இலங்கை அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் வெற்றிக்காக போராடிய சல்மான் அகா 44 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 63 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, எஷான் மலிங்க 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக மிகச் சிறந்தமுறையில் பந்துவீசியிருந்த துஷ்மன்த சமீர தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது, ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த பாகிஸ்தானுடன் நவம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. அதேநேரம் தொடரில் இருந்து ஜிம்பாப்வே வெளியேறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result
Pakistan
178/7 (20)
Sri Lanka
184/5 (20)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Salman Mirza 8 7 1 0 114.29
Kamil Mishara  c Mohammad Wasim Jnr b Abrar Ahmed 76 48 6 3 158.33
Kusal Mendis lbw b Abrar Ahmed 40 23 6 1 173.91
Kusal Perera c Mohammad Nawaz b Saim Ayub 6 8 0 0 75.00
Janith Liyanage  not out 24 24 2 0 100.00
Dasun Shanaka run out (Babar Azam) 17 10 2 1 170.00
Extras 13 (b 1 , lb 4 , nb 0, w 8, pen 0)
Total 184/5 (20 Overs, RR: 9.2)
Bowling O M R W Econ
Mohammad Wasim Jnr 4 0 29 1 7.25
Salman Mirza 4 0 39 0 9.75
Faheem Ashraf 3 0 30 0 10.00
Abrar Ahmed 4 0 28 2 7.00
Mohammad Nawaz 2 0 26 0 13.00
Agha Salman 1 0 8 0 8.00
Saim Ayub 2 0 19 1 9.50

Batsmen R B 4s 6s SR
Sahibzada Farhan  c Janith Liyanage  b Dushmantha Chameera 9 7 2 0 128.57
Saim Ayub b Eshan Malinga 27 18 4 1 150.00
Babar Azam lbw b Dushmantha Chameera 0 2 0 0 0.00
Agha Salman not out 63 44 4 3 143.18
Fakhar Zaman c Dasun Shanaka b Dushmantha Chameera 1 3 0 0 33.33
Usman Khan c Kusal Perera b Wanindu Hasaranga 33 23 2 2 143.48
Mohammad Nawaz c Wanindu Hasaranga b Eshan Malinga 27 16 1 2 168.75
Faheem Ashraf c Dasun Shanaka b Dushmantha Chameera 7 6 1 0 116.67
Mohammad Wasim Jnr not out 0 1 0 0 0.00
Extras 11 (b 2 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 178/7 (20 Overs, RR: 8.9)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 42 0 10.50
Dasun Shanaka 4 0 32 0 8.00
Dushmantha Chameera 4 0 20 4 5.00
Eshan Malinga 4 0 54 2 13.50
Wanindu Hasaranga 4 0 27 1 6.75

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<