பார்ல் றோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எசான் மாலிங்க

SA T20 League 2025

54
SA T20 League 2025

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான எசான் மாலிங்கவை பார்ல் றோயல்ஸ் அணி SA T20 லீக் தொடருக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

SA T20 தொடருக்காக பார்ல் ரோறயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜோன் டேர்னர், இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதால் பார்ல் றோயல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார்.

>>அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் சம்பியன்களாக ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்

இந்த நிலையில் ஜோன் டேர்னரின் இடத்துக்கு எசான் மாலிங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்காக அறிமுகமாகாத எசான் மாலிங்க, IPL தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த IPL ஏலத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இவரை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எனினும் தற்போது SA T20 விளையாடும் தங்களுடைய அணியான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக எசான் மாலிங்கவை ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<