இந்தோனேசியா, பாலி நகரத்தில் நடைபெறவிருக்கும் 3ஆவது பாலி 2016 ஹொக்கி விளையாட்டு விழாவில் முதல் முறையாக இலங்கை முதுநிலை ஹொக்கி சங்கம் (Sri Lanka Masters Hockey Association) கலந்துகொள்ளவுள்ளது.

நிற்பவர்கள் (இடம் இருந்து வலமாக): நதித் குடாகம, டன்கன் தேவேந்திர, ஆனந்த டி சில்வா, கோட்வின் சாலமன், அசோக் பீரிஸ், D.C. பெரேரா
இலங்கை தேசிய அணி மற்றும் தேசிய மட்டங்களில் அர்ப்பணிப்புடன் விளையாடிய மற்றும் ஆதரவு வழங்கிய முன்னாள் ஹொக்கி வீரர்களை உலகளவில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை சார்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் முயற்சியாக இலங்கை முதுநிலை ஹொக்கி சங்கம் (SLMHA) 2015ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

இப்போட்டிகளுக்காக இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, ஹொங்கொங், ஜப்பான் உட்பட போட்டிகளை ஒழுங்கு செய்திருக்கின்ற இந்தோனேசியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 20 ஆடவர் அணிகள், மற்றும் 16 மகளிர் அணிகள் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளன.
www.thepapare.com இற்க்கு கோட்வின் சாலமன் பிரத்தியேகமாக பேசுகையில், “இவ்வாறான போட்டிகள் நடைபெறுவது எங்களைப் போன்ற முன்னாள் வீரர்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தோன்ற செய்வதுடன், எங்கள் ரசிகர்களுக்கு, எங்களுடைய திறமைகளை மீண்டுமொரு முறை கண்டுகளிக்க வாய்ப்பளிக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற சவால் மிக்க நாடுகளை எதிர்கொண்டு போட்டிகளை வெல்லுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எங்கள் அணியில் டங்கன், அசோக் போன்ற அனுபவம் மிக்க சிறந்த வீரர்கள் இருப்பது அணியைப் பலப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
*இலங்கை முதுநிலை ஹொக்கி சங்கம் வெற்றி பெற www.thepapare.com வாழ்த்துகிறது.
ஆதாரம் – சண்டே டைம்ஸ் (Sunday Times)



















