கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 19

875

2007ஆம் ஆண்டு – ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள்

உலக டி20 கிரிக்கட் முதல் தடவையாக டி20 உலகக் கிண்ணம் 2007ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்றது. இந்த முதலாவது டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி பாகிஸ்தான் அணியை தோல்வி அடையச் செய்து வென்றது.

இந்த உலகக் கிண்ணத் தொடரின் 21ஆவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டர்பன் கிங்ஸ்மேட் கிரிக்கட் மைதானத்தில் சந்தித்தன.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன்படி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது. இதில் இந்திய அணியின் அதிரடி இடதுகை துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் வெறுமனே 12 பந்துகளில் அரைச் சதம் அடித்து அனைத்து வகை உலக கிரிக்கட் வரலாற்றிலும் சேர்த்து வேகமாக அரைச் சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்தோடு ஸ்டுவர்ட் ப்ரோட் வீசிய போட்டியின் 19ஆவது ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசி ஏற்கனவே ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி இருந்த தென் ஆபிரிக்க அணி வீரர் ஹேர்சல் கிப்ஸின் சாதனையை சமன் செய்தார்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் யுவராஜ் சிங்கைத் தவிர விரேந்தர் சேவாக் 68 ஓட்டங்களையும், கவ்தம் கம்பீர் 58 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்தின் பந்து வீச்சில் க்றிஸ் ட்ரெம்லட் 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். 19ஆவது ஓவரில் 6 சிக்ஸர்களை வாரிக் கொடுத்த ஸ்டுவர்ட் ப்ரோட் 4 ஓவர்களில் 60 ஓட்டங்களை வழங்கி இருந்தார்.  

இதன் பிறகு 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் விக்ரம் சொலன்கி 43 ஓட்டங்களையும், கெவின் பீட்டர்சன் 39 ஓட்டங்களையும், டெரன் மேடி 29 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பாக இர்பான் பதான் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 18

1986ஆம் ஆண்டு க்ரெம் கிரீமர் பிறப்பு

சிம்பாப்வே கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் க்ரெம் கிரீமரின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் அலெக்சாண்டர் கிரேம் கிரீமர்
  • பிறப்பு 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி
  • பிறந்த இடம் ஹராரே
  • வயது 30
  • விளையாடும் காலப்பகுதி 2005ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி வலதுகை சுழற்பந்து வீச்சு
  • விளையாடும் பாணிபந்து வீச்சாளர்
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 64
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 74
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 46/6
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 32.54
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 13
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 26
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 4/4
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 57.23
  • விளையாடிய டி20 போட்டிகள் 27
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 33
  • சிறந்த டி20 பந்துவீச்சு 11/3
  • டி20 பந்துவீச்சு சராசரி 18.84

துடுப்பாட்டத்தில் ஓரளவு துடுப்பாடும் திறன் கொண்ட க்ரெம் கிரீமர் ஒருநாள் போட்டிகளில் 46 இனிங்ஸ்களில் 16.18 என்ற துடுப்பாட்ட சராசரியில் 534 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 26 இனிங்ஸ்களில் 10.75 என்ற துடுப்பாட்ட சராசரியில் 258 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

கிரிக்கட் வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 17

செப்டம்பர் மாதம் 19ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1927ஆம் ஆண்டு – டிக் வெஸ்ட்காட் (தென் ஆபிரிக்கா)
  • 1957ஆம் ஆண்டு – சரத் குமார (இலங்கை)
  • 1974ஆம் ஆண்டு – நைமுர் ரஹ்மான் (பங்களாதேஷ்)
  • 1975ஆம் ஆண்டு – பிராட்மேன் எதிரிவீர (இலங்கை)
  • 1977ஆம் ஆண்டு – ஆகாஷ் சொப்ரா (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்