வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 06

233
OTD-Aug-6

1997ஆம் ஆண்டுஇலங்கை அணியின் உலக சாதனை

1997ஆம் ஆண்டு இந்திய கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இத்தொடரின் 1ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.

பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 537 ஓட்டங்களைப் பெற்றுத் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 39 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மார்வன் அதப்பாத்துவின் விக்கட்டை இழந்தது. அதன் பிறகு சனத் ஜயசூரியவோடு இணைந்து விளையாட களமிறங்கிய ரொஷான் மஹானாம ஆகிய ஜோடி 2ஆவது விக்கட்டுக்காக 576 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இதில் சனத் ஜயசூரிய 340 ஓட்டங்களையும் ரொஷான் மஹானாம 225 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 952 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது போட்டி சமநிலையில் முடிவு பெற்றது.

இலங்கை பெற்ற இந்த 952 என்ற ஓட்டங்கள் தான் இதுவரைக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணி ஒரு இனிங்ஸில் பெற்ற அதி கூடிய ஓட்டமாகக் காணப்படுகிறது.

1984ஆம் ஆண்டுஜெசி ரைடர் பிறப்பு

நியூசிலாந்து  கிரிக்கட்  அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெசி ரைடரின்  பிறந்த தினமாகும். துடுப்பாட்டத்தோடு பகுதி நேரமாக பந்து வீசும் திறமை கொண்ட  இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான  ஜெசி ரைடர் நியூசிலாந்து கிரிக்கட் அணிக்காக 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலான 06 வருட காலப் பகுதியில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40.93 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1269 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 201 ), 48 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 33.21 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1429 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 107 ), 22 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 22.85 என்ற துடுப்பாட்ட சராசரியில் 358 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 62 ) பெற்றுள்ளார்.

1969ஆம் ஆண்டுசைமன் டோல் பிறப்பு

நியூசிலாந்து  கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சைமன் டோலின் பிறந்த தினமாகும்.

ஓரளவு துடுப்பாடும்  திறமை கொண்ட வலதுகை வேகப் பந்து வீச்சாளரான சைமன் டோல் நியூசிலாந்து கிரிக்கட் அணிக்காக 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையிலான 08 வருட காலப் பகுதியில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.30 என்ற பந்து வீச்சு சராசரியில் 98 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 7/65 ), 42 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 40.52 என்ற பந்து வீச்சு  சராசரியில் 36 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 4/25 ) கைப்பற்றியுள்ளார்.

தற்போது இவர் முன்னணி கிரிக்கட் வர்ணனையாளராக செயற்பட்டு வருகிறார்.

1985ஆம் ஆண்டுஎலன் போர்டர் 146*

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 257 ஓட்டங்களைப் பெற்றது. பின் இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் 482 ஓட்டங்களைப் பெற்றது.

அதன் பிறகு 225 ஓட்டங்கள் பின்னிலையில் அவுஸ்திரேலிய அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆடிய போது 340 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுகளை இழந்து இருந்த போது போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. இதில் எலன் போர்டர் ஆட்டம் இழக்காமல் 146 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 5

ஆகஸ்ட்  மாதம் 06ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1933 க்ரிபால் சிங் (இந்தியா)
  • 1947 டோனி டெல் (அவுஸ்திரேலியா)
  • 1953 இக்பால் காசிம் (பாகிஸ்தான்)
  • 1965 வின்ஸ் வெல்ஸ் (இங்கிலாந்து)
  • 1971பியல் விஜயதுங்கா (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்