வரலாற்றில் இன்று : மே மாதம் 06

237
Graeme Hick

1988ஆம் ஆண்டு – கிரேம் ஹிக்கின் 405* 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேம் ஹிக், இங்கிலாந்தின் உள்ளூர் அணியான வொர்செஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்காக விளையாடி சமர்செட் அணிக்கு எதிராக 35 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டம் இழக்காமல் 405 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த 405 ஓட்டமானது இங்கிலாந்தின் முதல் தர கிரிக்கட் வரலாற்றில் 93 வருடங்களுக்குப் பிறகு தனி ஒருவரால் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் – மே 05

1965ஆம் ஆண்டு – அவுஸ்திரேலிய அணிக்காக ஆகக்கூடிய முதல் விக்கட் இணைப்பாட்டம் .

மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய சார்பாக பில் லொவ்ரி மற்றும் பொப் சிம்ப்சன் ஜோடி முதல் விக்கட்டுக்காக 382 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் முதல் விக்கட்டுக்காகப் பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டமாகும். அது மட்டுமின்றி இந்த இணைப்பாட்டம் உலக டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் பெறப்பட்ட 5ஆவது அதி கூடிய இணைப்பாட்டமாகும்.

மே மாதம் 06ஆம் திகதியில் பிறந்த வேறு வீரர்கள்

1917 ராய் ஸ்காட் (நியுசிலாந்து)
1927 மைக்கேல் பிரடெரிக் (மேற்கிந்திய தீவுகள்)
1932 எலீன் ஹர்லி (தென் ஆபிரிக்கா)
1981 லக்ஷ்மி சுக்லா (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்