ஒல்லி ரொபின்சனுக்கு 8 போட்டிகளில் விளையாடத் தடை

155
Getty Image

இனவெறி கருத்து வெளியிட்ட சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சனுக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சன், கடந்த மே மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். 

அந்தப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அவர் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து வீரர் இடைநீக்கம்

இந்த நிலையில், எட்டு வருடங்களுக்கு முன் அவர் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த பலர் கண்டனங்களை தெரிவித்து இருந்ததுடன், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தனது அப்போதைய டுவிட்டர் பதிவுகளுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். இருந்தும் அவர் மீது இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது.  

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு இதுதொடர்பில் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் அவருக்கு 8 போட்டிகளில்  விளையாட தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும், 3200 பவுண்ட்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

இந்த 8 போட்டிகள் தடையில், 5 போட்டிகளுக்கான தடையை அடுத்த 2 வருடங்களுக்கு விதிக்க முடியாது. 

அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடாதது மற்றும் தற்போது நடைபெற்று வருகின்ற விடாலிடி டி-20 பிளாஸ்ட் போட்டிகளை கணக்கில் எடுத்துக்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, உடனடியாக சர்வேதச போட்டிகளில் விளையாட அனுமதியளித்துள்ளது. 

இதனால், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு விளையாட முடியும் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…