அபு தாபி T10 தொடரில் களமிறங்கும் இசுரு உதான!

Abu Dhabi T10 League 2021

295
Isuru-Udana

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடருக்கான, பங்ளா டைகர்ஸ் அணியில், இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் இசுரு உதான தக்கவைக்கப்பட்டுள்ளார்.

அபு தாபி T10 தொடர் கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 6ம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

இசுரு உதான மூன்றாவது பருவகால போட்டிகளில் பங்ளா டைகர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நிலையில், கடந்த பருவகாலத்தில் அவர் விளையாடவில்லை. எனினும், மீண்டும் பங்களா டைகர்ஸ் அணிக்காக அடுத்த பருவகாலத்துக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். குறித்த விடயத்தை பங்ளா டைகர்ஸ் அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இசுரு உதான நடைபெற்றுமுடிந்த இந்திய அணிக்கு எதிரான தொடருடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். எனினும், இறுதியாக நடைபெற்று முடிந்த கரீபியன் பிரீமியர் லிக்கில், ட்ரைபன்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளைாடியிருந்ததுடன், தொடர்ந்து லீக் தொடர்களில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த ஆண்டு அபு தாபி T10 வீரர்கள் தக்கவைப்பில், இலங்கை அணியின் தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, இசுரு உதான மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<