PSL போட்டிகளில் அறிமுகம் பெற்ற நுவான் துஷார

306

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் இளம் வேகப் பந்துவீச்சாளரான நுவான் துஷார பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரில் அறிமுகம் பெற்றிருக்கின்றார்.

RCB அணியுடன் இணையும் சானியா மிர்ஷா!

புதன்கிழமை (15) 2023ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான PSL தொடரின் மூன்றாவது லீக் போட்டி குயேட்டா கிளேடியேட்டர்ஸ் மற்றும் முல்டான் சுல்டான்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவே நுவான் துஷார PSL T20 போட்டிகளில் அறிமுகம் பெற்றிருக்கின்றார்.

நுவான் துஷார லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் சகோதர அணியாக காணப்படும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கும் விளையாடி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் மூலமாகவே PSL தொடரிலும் அறிமுகம் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

நுவன் துஷாரவின் அறிமுகப் போட்டியில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி முல்டான் சுல்டான் அணிக்கெதிராக கைப்பற்றிய ஒரே விக்கெட்டானது நுவான் துஷார மூலம் பெறப்பட்டிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். எனினும் துரதிஷ்டவசமாக குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி முல்டான் சுல்டான்ஸ் உடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

நுவரெலியாவில் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை அணி!

இலங்கை அணிக்காக நான்கு T20i போட்டிகள் அடங்கலாக இதுவரை 67 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் நுவான் துஷார இதுவரை 86 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், நுவான் துஷார தவிர வனிந்து ஹஸரங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகிய இலங்கை அணி வீரர்களும் இந்த ஆண்டுக்கான PSL தொடரில் விளையாடுவதற்கு ஏலம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<