சூதாட்டக்காரர்களுக்கு ஆப்பு வைக்கும் புதிய சட்டமூலத்தை தடுக்க சதி – ஹரீன்

75

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நேற்று (07) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்ற அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் ஒருசிலரின் சதித் திட்டத்தினால் நிறைவேற்றப்பட முடியாமல் போனதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பை பிரதமர் விடுத்த விசேட வர்த்தமானி அறிக்கைக்கு அமைய எதிர்வரும் 11ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்காத வீரர்களுக்கு 2 வருட போட்டித் தடை

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒவ்வொரு ……….

விளையாட்டுத்துறை அமைச்சின் மினி கேட்போர் கூடத்தில் நேற்று (07) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்iயில்

”இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஆட்டநிர்ணயம், ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட குற்றங்களை புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விசேட சட்டமூலத்துக்கான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் அனுமதி கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது

இந்த நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகியன நேற்று (07) காலை பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது. உண்மையில் இது தற்செயலாக நடந்த ஒரு விடயமாக அல்லது வேண்டுமென்றே யாராவது செய்த சதியாகக் கூட இருக்கலாம்.  

எனவே, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர்களுக்கு எதிராக சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், இவ்வாறானதொரு முக்கியமான சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமல் போனது கவலையளிக்கிறது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் நாம் தோற்றால் இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு நாம் இவ்வளவு நாட்கள் எடுத்த முயற்சிகள் வீணாகிப் போய்விடும்.

இந்த நாட்டின் சட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமாயின், விளையாட்டைப் பயன்படுத்தி சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டணை வழங்குவதில் என்ன தவறு இருக்கின்றது” என அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதேநேரம், குறித்த சட்டமூலம் அமுலுக்கு வந்தால் ஆசியாவிலேயே விளையாட்டுத்துறையில் குற்றம் புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற முதல் நாடென்ற பெருமை இலங்கைக்கு கிடைக்கும்

அதுமாத்திரமின்றி, சூதாட்டம் மற்றும் ஆட்டநிர்ணயம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு உயர்நிதீமன்றத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வழக்கு விசாரணைகளின் பிறகு அதிகபட்சமாக 100 மில்லியன் ரூபா அபராதத்துடன், 10 வருடங்கள் சிறைத் தண்டணை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

அத்துடன், தகவல்களை மறைப்பவர்களுக்கு 3 இலட்சம் ரூபா அபாரதத்துடன், 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேநேரம், குறித்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குகின்ற நபருக்கு சன்மானமும் வழங்கப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் ……

மேலும், ஊழலற்ற விளையாட்டுத்துறையை பாராளுமன்றத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்த நாட்டில் விளையாட்டுத்துறைக்கும் சட்டம் இருக்க வேண்டும். உதாரணமாக, வெளிநாட்டில் இருந்து சூதாட்ட முகவர்கள் இலங்கைக்கு வந்து எமது வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயற்சிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் எந்தவொரு தண்டனையும் பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

அண்மையில் நீர்கொழும்புப் பகுதியில் சூதாட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு பாகிஸ்தானியர். எனினும் அவரை தண்டிக்க இலங்கையில் சட்டம் இல்லாததால் அவரை விடுவிக்க நேர்ந்தது

எனவே, இந்த சட்டமூலத்தை அமுல்படுத்தினால் நிச்சயம் சூதாட்டத்தை இந்நாட்டில் இருந்து இல்லாதொழிக்க முடியும். தண்டனை வழங்க முடியும். அதேபோல, சூதாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் விளையாட்டுத்துறையில் எந்தப் பதவியும் வகிக்க தடைவிதிக்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<