அபார சதங்களை விளாசிய சரித் அசலன்க, தசுன் ஷானக்க

40

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சரித் அசலன்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரது சதங்களோடு கொழும்பு அணியானது, கண்டி அணிக்கு எதிராக அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்தருக்கின்றது.

>>இங்கிலாந்து ஒருநாள், T20I அணியின் பயிற்றுவிப்பாளராகும் மெக்கலம்!

கொழும்பு எதிர் கண்டி

கொழும்பு, கண்டி அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் கொழும்பு அணியானது 8 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்கள் எடுத்தது. கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் சரித் அசலன்க 138 ஓட்டங்களை பெற, தசுன் ஷானக்க 103 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில் கொழும்பு அணியின் பந்துவீச்சில் நிப்புன் ரன்சிக்க 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணியானது 178 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது. கொழும்பு அணியின் வெற்றியினை தசுன் ஷானக்க, விஹாஸ் தேவ்மிக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – 342/8 (50) சரித் அலசன்க 138, தசுன் ஷானக்க 103, நிப்புன் ரன்சிக்க 29/3

 

கண்டி – 178 (38.5) கவின் பண்டார 57, தசுன் ஷானக்க 22/3, விஹாஸ் தேவ்மிக்க 27/3

 

முடிவு கொழும்பு 164 ஓட்டங்களால் வெற்றி

தம்புள்ளை எதிர் கோல்

கொழும்பில் மழையின் தாக்கத்திற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் கோல் அணியானது தம்புள்ளை அணியினை டக்வத் லூயிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. கோல் அணியின் வெற்றியினை தினுக்க டில்சான் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு, ஷிரான் பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – 67 (21.4) அஞ்சால பண்டார 34, தினுக்க டில்சான் 12/4, சிரான் பெர்னாண்டோ 10/3

 

கோல் – 67/2 (5.5)

 

முடிவு கோல் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<