மேற்கிந்திய தீவுகளில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரிலிருந்து இலங்கை அணியின் நுவான் துஷார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
CPL தொடரில் சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிக்காக இவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் உபாதை காரணமாக இவர்கள் தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>> 23 வயதின் கீழ் மேஜர் கழக கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் ஆரம்பம்
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலிருந்து நுவான் துஷார பெருவிரல் உபாதை காரணமாக விலகினார். அதேநேரம் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வனிந்து ஹஸரங்க தசைப்பிடிப்பு உபாதை காரணமாக வெளியேறினார்.
இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் CPL தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக தென்னாபிரிக்காவின் டெப்ரைஷ் சம்ஷி மற்றும் என்ரிக் நோக்கியா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். டெப்ரைஷ் சம்ஷி CPL தொடரில் 32 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், என்ரிக் நோக்கியா முதன்முறையாக CPL தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<