இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் ஏன் இரண்டாமிடம்?

332
Road Saftey World Series Twitter

வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் நடைபெற்றுவரும் வீதி பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இன்று (16) செவ்வாய்க்கிழமை நிறைவுக்கு வரவுள்ளது. 

இம்முறை தொடரில் ஐந்து போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் மாத்திரம் தோல்வியையும் தழுவிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிராக 6 விக்கெட்டுக்களால் வெற்றயிட்டியமையால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியினை நிர்மூலமாக்கிய டில்ஷான்

இதன்படி, வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் புள்ளிப்பட்டியலில் மொத்தமாக 5 வெற்றிகளைப் பதிவுசெய்து 1.7771 என்ற நிகர ஓட்டவேக அடிப்படையில் 20 புள்ளிகளுடன் இந்தியாவைப் பின்தள்ளி இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது

மறுபுறத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணி, 20 புள்ளிகளைப் பெற்று நிகர ஒட்டவேக அடிப்படையில் (1.733) இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. 

எனினும், இந்திய லெஜண்ட்ஸ் அணி இலங்கையை வீழ்த்திய காரணத்தால் திருத்தியமைக்கப்பட்ட புதிய புள்ளிப்பட்டியலின் படி இலங்கை லெஜண்ட்ஸ் அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது

எனவே, போட்டி விதிமுறைகளில் இந்த திடீர் மாற்றத்தை போட்டி ஏற்பாட்டுக்குழு நேற்றைய தினம் நடைபெற்ற பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாபிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் பிறகு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இதன்படி, இலங்கை லெஜண்ட்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா லெஜண்ட்ஸ் அணியுடன், 18ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.  

அதேபோல, இன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<